வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அந்த அணியின் ஃபீல்டிங்கையும் சரிசெய்த எம்.எஸ்.தோனி

MS Dhoni
MS Dhoni

நடந்தது என்ன?

எம்.எஸ்.தோனி எந்தவகை சூழ்நிலையிலும் தன்னுடைய கேப்டன் ஷீப் திறனை நிறுத்தியதில்லை. மே 28 அன்று நடந்த வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அந்த அணியின் ஃபீல்டிங்கை சரி செய்தார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்களுக்கு தெரியுமா...

மே 30 அன்று தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. கே.எல்.ராகுல் மற்றும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கதைக்கரு

எம்.எஸ்.தோனி தனது பவர் ஹிட்டிங் ஷாட்களின் மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருந்த சமயத்தில் இவர் செய்த மற்றொரு காரியம் ரசிகர்களை மேன்மேலும் ஆச்சரியப்பட வைத்தது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆட்டத்தின் 40வது ஓவரை சபீர் ரகுமான் வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்தவர் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி. உலகில் கேப்டன்ஷீப்பில் சிறந்து விளங்கும் தோனி, சபீர் ரகுமான் பந்து வீச பாதி தூரம் ஓடி வந்த போது நிறுத்தினார்.

உடனே ஒரு ஃபீல்டர் தவறான திசையில் நின்று கொண்டிருக்கிறார் என்று கூறினார் தோனி. அத்துடன் அவரை எந்த இடத்தில் ஃபீல்டிங் நிற்க வைக்க வேண்டும் என சபீர் ரகுமானிற்கு தெரிவித்தார். சபீர் ரகுமானும் தோனியின் அறிவுரைப்படி அந்த ஃபீல்டரை அந்த இடத்திற்கு மாற்றினார்‌. ஒரு பௌலரின் மனநிலையையும் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. வர்ணனையாளர்களும் ஃபீல்டர் தவறான திசையில் தான் நின்று கொண்டுள்ளார் என ஒப்புககொண்டனர். இந்த நிகழ்வின் மூலம் தோனி தன்னை முழுமையாக விளையாட்டில் அர்ப்பணித்து கொள்கிறார் என நமக்கு தெரிகிறது.

இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான போட்டியில் நடந்த இந்த நிகழ்வின் கானோளி இங்கு இனைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்திலே ஷீகார் தவான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய காரணத்தால் இந்திய அணி தடுமாறிய நிலையில் இருந்தது. சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் விராட் கோலியால் தனது அரைசதத்தை நிறைவு செய்ய முடியவில்லை. பின்னர் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி மற்றும் கே.எல்.ராகுல் ஒரு வலிமையான பார்ட்னர் ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் தங்களது சதத்தை நிறைவு செய்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 359 ரன்களை குவித்ததது.

வங்கதேசம் ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்து விளையாடிய தொடங்கிய போது ஜாஸ்பிரிட் பூம்ரா தனது வேகத்தில் டாப் ஆர்டரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பந்துவீச வந்த இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை சுருட்டினர்‌.

அடுத்தது என்ன?

உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு அதிக நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜீன் 5 அன்று தென்னாப்பிரிக்க அணியை தனது முதல் தகுதிச் சுற்று போட்டியில் சந்திக்க உள்ளது.

Quick Links

App download animated image Get the free App now