நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பை தொடரின் அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான "ஸ்டார்" இவ்வருட உலகக் கோப்பை தொடரை அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நெட்வொர்க்கில் மட்டும் முதல் வாரத்தில் 269 மில்லியன் மக்களால் உலகக் கோப்பை போட்டிகள் காணப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடங்கியது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனத்திற்கு ஐசிசி அளித்தது. 2019 உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிருப்பான தொடராகும். இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டுள்ளனர்.
கதைக்கரு
மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கிய 2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் "மண்ணின் மைந்தர்கள்" இங்கிலாந்து மோதின. கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை தொடர் மழையினால் ரத்தாகியுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உலகக் கோப்பை தொடரில் தங்களது விருப்பமான அணியின் ஆட்டத்திறனை கண்டு வருகின்றன.
உலகக் கோப்பை தொடங்கிய முதல் வாரத்தில் மட்டும் உலகெங்கும் உள்ள 289 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் நெட்வொர்க்கில் உலகக் கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்ந்துள்ளனர்.
கடந்த உலகக் கோப்பை தொடர்களில் 107.2 ஆக இருந்த பார்வையாளர்கள் தற்போது இரு மடங்காக மாறியுள்ளது மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சிரமமின்றி கிரிக்கெட் காணும் வசதிகளை ஸ்டார் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு செய்து அளித்துள்ளது.
இவ்வருட உலகக் கோப்பை தொடரை ரசிகர்கள் மேன்மேலும் அதிகமாக கொண்டாடுவார்கள் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு முண்ணனி காரணம் கிரிக்கெட் விளையாட்டு உலகின் உள்ள சிறு சிறு நாடுகளுக்கும் சென்றதுதான் காரணம். இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு பெரிய நன்றி! ஆசிய நாடுகளில் மட்டுமல்லாமல் துனைக் கண்டங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவைக் கண்டு களிக்கின்றனர். பொதுவாக உலகக் கோப்பை தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கு ஈடாக வர இயலாது.
அடுத்தது என்ன?
கடந்த சில நாட்களாக இங்கிலாந்து வானிலை சுத்தமாக சரியில்லை. அதிகம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு போட்டி ஆரம்பிக்கும் போது மழை பெய்து உலகக் கோப்பை தொடரை பாழாக்குகிறது. இது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தம் மற்றும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் மிகவும் வலிமையான அணிகள் மோத விருப்பதால், இங்கிலாந்து வானிலை மாற வேண்டும் என ரசிகர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது ஸ்டார் நெட்வொர்க்கிற்கு கிடைத்துள்ள பார்வையாளர்கள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் இல்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் இதை விட அதிக பார்வையாளர்களை கடக்கும்.