கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, ஆசியாவைச் சேர்ந்த இலங்கை அணியை இன்று சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கின்றது. இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளில் 48 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியும் 41 ஆட்டங்களில் இலங்கை அணியின் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய பிரண்டன் மெக்கலம் ஓய்வு பெற்றமையால் இம்முறை கனே வில்லியம்சன் அணியை வழி நடத்துகிறார்.
கடந்த 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடர்களில் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறது, இலங்கை அணி. ஆனால், இம்முறை இலங்கை சற்று பலம் குறைந்த அணியாகவே காணப்படுகிறது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால்:
அசுரத்தனமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள நியூசிலாந்து அணி இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக ரன்களை குவிக்கும் வீரரில்லாமல் தடுமாறி வருகிறது. இன்னிங்சில் சிறப்பாக நங்கூரம் போல் தமது பேட்டிங்கை நிலைநிறுத்தி விளையாடக்கூடிய கேப்டன் வில்லியம்சன் இருப்பது இந்த அணிக்கு கூடுதல் பலமாகும். நல்லதொரு தொடக்கத்தை இந்த அணி கண்டால் பின் வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களும் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சிரமம் இல்லாத காரியமாகும். ஒருங்கிணைந்த பேட்டிங் திறன் வெளிப்பட்டால் ஏறக்குறைய 350 ரன்களை நியூசிலாந்து அணி எளிதாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தால்:
பலமற்ற பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் காணப்படுகிறது. அனுபவ அடிப்படையில் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியின் தனி ஒரு வீரராக திகழ்கிறார். குஷால் பெரேரா மற்றும் லஹிரு திரிமானி ஆகியோர் இலங்கை அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளித்தால் கௌரவமான ஸ்கோரை இந்த அணி எட்ட முடியும். இந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 300 ரன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
நியூசிலாந்து அணி:
கனே வில்லியம்சன், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில், டாம் பிலண்டள், ஜிம்மி நீசம், ஹென்றி நிகோலஸ், டிரென்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், டிம் சவுதி மற்றும் ஈஸ் சோதி.
இலங்கை அணி:
திமுத் கருணாரத்னே, லஹிரு திருமணி, குஷால் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குஷால் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மென்டிஸ், லசித் மலிங்கா, இசுரு உடனா மற்றும் நுவான் பிரதீப்.