2019 உலகக் கோப்பை தொடங்க 3 நாட்களே உள்ளது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் தங்களது எதிர்பபார்ப்பை யுகித்து வைத்திருப்பர். புதிய விதத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2019 உலகக் கோப்பையை நடத்த இருப்பதால் இடம்பெற்றுள்ள 10 அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள அணியாக வலிமையுடன் திகழ்கிறது. இருப்பினும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உலகக் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணிகளாக உள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து மைதானங்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த சில வருடங்களாக விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மூன்றாவது உலகக் கோப்பையாக இந்திய அணிக்கு தனது கேப்டன் ஷீப்பில் பெற்று தர வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். இதுவே அவரது வாழ்நாள் சாதனையாக பார்க்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி-க்கு முதல் உலகக்கோப்பை தொடராகும். 2011ல் தோனியின் கேப்டன்ஷீப்பில் இந்தியா வென்ற உலகக் கோப்பையில் ஒரு அறிமுக வீரராக விராட் கோலி களமிறங்கினார். அரையிறுதியில் தோனியின் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் அரையிறுதியில் தோல்வியை தழுவிய 2015 உலகக் கோப்பையில் விராட் கோலி முன்னணி வீரராக களமிறங்கினார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சாதரணமாக பெரும்பாலான சாதனைகளை முறியடித்தும், புதிதாக படைத்தும் வருகிறார். இன்னும் இரண்டு மாதத்திற்குள் மற்றொரு பெரும் சாதனையை விராட் கோலி முறியடிக்கவுள்ளார். உலகக் கோப்பையில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனைதான் அது.
விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார். எத்தைகைய இடர்பாடும் இன்றி ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை கொண்டவர். இந்திய சக வீரர்கள் இவருடன் சற்று கை கொடுத்து விளையாடினால் போதும், இவர் எவ்வளவு அதிக இலக்காக இருந்தாலும் அதனை சிறப்பாக சேஸிங் செய்து விளையாடக் கூடியவர். கடந்த வருட கோடைகாலத்தில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது விராட் கோலி அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளார். அத்துடன் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை விராட் கோலி கடந்த காலத்தில் வெளிபடுத்தி உள்ளார். எனவே உலகக் கோப்பையில் இந்த அணிகளுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து அதிக ரன்களை குவிப்பார்.
உலகக் கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக ரன்களை குவித்தவர் மஹேல்லா ஜெயவர்த்தனே. மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக 548 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் 2007 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அந்த தொடரில் ஜெயவர்த்தனே-வின் சராசரி 60.88 ஆகும். இருப்பினும் 2007 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. கேப்டனாக அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவதாக 2007 உலகக் கோப்பையில் 539 ரன்களை குவித்த ரிக்கி பாண்டிங் உள்ளார்.