கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒருவித விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வென்றதில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கடந்த 2015 உலக கோப்பை தொடரிலும் "மக்கா மக்கா" என்று தொடர்ந்து பாகிஸ்தானை விமர்சிக்கும் வகையில் இதே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பரத்தினை வெளியிட்டது. அதேபோல், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்திற்காக ஒளிபரப்பிய விளம்பரம் இந்திய அணிக்கு எதிரான தங்களது மோசமான சாதனையை படைத்திருக்கும் பாகிஸ்தான் அணியை கடும் அளவில் விமர்சிக்கும் வகையில் அமைந்தது. இந்த புதுவித விளம்பரத்தில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வங்கதேச ரசிகரிடம் பேசுவது போல் இருந்தது. அதில் அந்த பாகிஸ்தான் ரசிகர் எப்பொழுதும் விட்டுக் கொடுக்க கூடாது என்று தனது தந்தையார் கூறியுள்ளதை தெளிவுபடுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு இந்திய ரசிகர் தான் இதுபோன்று ஒருபோதும் கூறியதில்லை என்றார். அந்த பாகிஸ்தான் ரசிகருக்கு தந்தை போல இந்திய ரசிகர் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த விளம்பரம் தெளிவாக எடுத்துரைத்தமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்று அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மணி ஐசிசியிடம் இவ்வகை விளம்பரத்திற்காக முறையிட்டுள்ளார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூத்த அலுவலரில் ஒருவர் இதனை கூறியுள்ளார்.
இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர்,
"ஆமாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக மணி ஐசிசயிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தினை எதிர்த்து முறையிட்டுள்ளார். ஆனால், அவர் கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தனது எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார் என்பதை என்னால் நிச்சயமாக கூற முடியாது".
மற்ற செய்திகளின் அடிப்படையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஐசிசி பேசி உள்ளதாக தெரிகிறது. எனவே, வணிக ரீதியில் அடிப்படையில் தேவையில்லாத விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட வேண்டாம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விளம்பர ஒளிபரப்பு பற்றி ஐசிசி பேசியுள்ளதால், இனி இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் குறிப்பாக பாகிஸ்தான் அணி விளையாட உள்ள போட்டிகளில் தவறுகள் நேராவண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியதால் இந்திய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் எவரும் இதனை விரும்பவில்லை.