ஐசிசி 2019 உலகக்கோப்பை ஒரு நெருக்கடியான தொடராகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில் புள்ளிபட்டியலில் ஒரு சிறந்த இடத்தில் உள்ளன. இதற்கிடையில் வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் டாப் 4 இடங்களுக்கு போட்டி போட தயாராகி வருகின்றன.
இதைத்தவிர ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது. எனவே மற்ற அணிகள் தற்போது யாரை வேண்டுமானலும் வீழ்த்திக் கொள்ளலாம். எனவே தற்போது ஆப்கானிஸ்தானை தவீர மீதமுள்ள 9 அணிகளில் எந்த அணி வேண்டுமானலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கலாம்.
புள்ளிகள் அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை கணக்கிடுகையில் மழை ஆட்டத்தை நிறுத்தி விடுகிறது. நாம் இங்கு அடுத்த 5 போட்டிகளுக்குப் பிறகு புள்ளிப் பட்டியலில் அணிகளின் இடங்களை குறித்த ஒரு பார்வையை காண்போம்.
ஆட்டம் 25: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா, எட்பஷ்டன்
நியூசிலாந்து அணி இவ்வருட உலகக்கோப்பை தொடரில் அதிரடி தொடக்கத்தை அளிக்கும் விதமாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 4வது போட்டி மழையினால் தடைபட்டது. அதனால் ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா தனது முதல் வெற்றியை 5வது போட்டியில் தான் பெற்றுள்ளது. காலநிலையைப் பொறுத்தவரை இப்போட்டியின் போது மழை பெய்ய குறைவான வாய்ப்புகளே உள்ளது. எனவே நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தும்.
ஆட்டம் 26: ஆஸ்திரேலியா vs வங்கதேசம், டிரென்ட் பிரிட்ஜ்
வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடந்த போட்டியில் சாதரணமாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் வங்கதேசம் வென்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் நம்பிக்கை கூடும். ஆனால் ஆஸ்திரேலியா அணி மிகவும் வலிமை வாய்ந்தது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
காலநிலையை பொறுத்தவரை வங்கதேசத்திற்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்ய சிறிது கூட வாய்ப்பில்லை.
ஆட்டம் 27: இங்கிலாந்து vs இலங்கை, ஹேட்டிங்லே
மண்ணின் மைந்தர்கள் மற்றும் 2019 உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியான இங்கிலாந்து, இலங்கை அணியை விட பன்மடங்கு சிறந்த அணியாக உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்திய அந்த தந்திரத்தை "ஐஸ்லேன்ட்" இலங்கை கையாள வாய்ப்புள்ளது.
காலநிலையின் கணிப்புப்படி மழை பெய்ய வாய்ப்பில்லை. எனவே இங்கிலாந்து மேலும் இரு புள்ளிகளை பெற அதிக வாய்ப்புள்ளது.
ஆட்டம் 28: இந்தியா vs ஆப்கானிஸ்தான், ரோஸ்பௌல்
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல போராடும் அணிகளுள் முன்னனி அணியாக உள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. தற்போது உலகக்கோப்பையில் இடம்பெற்றுள்ள அணிகளுள் மிகவும் வலிமை குன்றிய அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
காலநிலைப்படி மழை இப்போட்டியில் குறுக்கிட வாய்ப்பில்லை. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு புள்ளிகள் பெறுவதை யாரலும் தடுக்க இயலாது.
ஆட்டம் 29: மேற்கிந்தியத் தீவுகள் vs நியூசிலாந்து, ஓல்ட் டெஃபோர்ட்
பாகிஸ்தானிற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சிறப்பான வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின் விளையாடிய போட்டிகளில் தடுமாறி வந்துள்ளது. எனவே நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சற்று கவனமாக செயல்படும்.
நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 400க்கும் மேலான ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நம்பிக்கையுடன் வெற்றி பெறும் நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்க வாய்ப்புள்ளது. டாப் 4ல் எந்த அணி இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை.
இப்போட்டிகளுக்குப் பிறகு புள்ளிபட்டியலில் அணிகளின் நிலை:
மேற்கண்ட 5 போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் இருக்கும். 4வது இடத்தில் 9 புள்ளிகளுடன் நியூசிலாந்து இருக்கும். ஆனால் மற்ற அணிகள் அந்த இடத்திற்கு போட்டி போட வாய்ப்புள்ள நிலையில் இனிவரும் அனைத்து போட்டிகளும் பெரும் விருவிருப்பாக இருக்கும்.