பன்னிரண்டாவது ஐசிசி உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 1992-ஆம் ஆண்டு கடைபிடித்த பாணியை போலவே நடப்பு தொடரிலும் 10 அணிகளை கொண்டு ஒரே குழுவில் இணைத்து தொடரை நடத்தி வருகிறது, ஐசிசி. இருப்பினும், தொடரின் முற்பாதி போட்டிகளில் பெரும்பாலானவை மழையால் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, தொடரின் பிற்பாதியில் அமைந்த ஒவ்வொரு போட்டியும் அரையிறுதி சுற்றை தீர்மானிக்கும் போட்டியாகவே அமைந்தது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி, இம்முறை முதல் அணியாக அறையிறுதிச் சுற்றுக்கு அடியெடுத்து வைத்தது. 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வகித்து வருகிறது, ஆஸ்திரேலியா. நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தொடரில் இருந்து விலகியுள்ளன. மீதமுள்ள அணிகளான நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவை எஞ்சியுள்ள இரு அரையிறுதிப் இடங்களுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளன. எனவே, அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்த மூன்று அணிகளில் நடைபெற்ற இந்த தொகுப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
புள்ளிப் பட்டியலில் ஒரே புள்ளிகள் மற்றும் ஒரே வெற்றிகளை குவித்து சரிசமமாக விளங்கும் அணிகளின் அரையிறுதி வாய்ப்பபு நிகர ரன் ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
#1.நியூஸிலாந்து - 11 புள்ளிகள்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றை உறுதி செய்ய உள்ளது, நியூஸிலாந்து. இருப்பினும், இங்கிலாந்து அணியிடம் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோற்றிருக்க வேண்டும். இதன் முடிவில், நியூசிலாந்து அணி 11 புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றில் பயணிக்க இயலும். ஒருவேளை பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா பதினோரு புள்ளிகளுடன் இருக்கும். இந்நேரத்தில் இரு அணிகளும் சரிசம வெற்றிகளுடன் இருப்பதால் நிகர ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
#2.இங்கிலாந்து - 10 புள்ளிகள்:
இம்முறை உலக கோப்பை தொடரை நடத்த அணியான இங்கிலாந்து, அடுத்தடுத்து இரு தோல்விகளை கண்டபின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது இறுதி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதில் அரையிறுதி வாய்ப்பு நுழைந்துவிடலாம். அப்படி இல்லாமல், நியூசிலாந்து அணியிடம் தோல்வி பெற்றிருந்தால் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலை உருவாக வேண்டும். மேற்கண்டபடி நிகழ்ந்தால், இங்கிலாந்து அணி 10 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பிற்கு அடி எடுத்து செல்லும்.
#3.பாகிஸ்தான் - 9 புள்ளிகள்:
மற்ற இரு அணிகளை போல் இல்லாமல், பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு சற்று குழப்பமானது. வங்கதேச அணிக்கு எதிரான தனது இறுதி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதுமட்டுமின்றி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றாக வேண்டும். ஒருவேளை, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா பதினோரு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இருக்கும். இவ்வேளையில், சரிசம வெற்றிகளுடன் இந்த இரு அணிகளும் விளங்குவதால் நிகர ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று வாய்ப்பு இந்த அணிக்கு தீர்மானிக்கப்படும்.