2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பலம் வாய்ந்த 10 சர்வதேச அணிகள் தங்களை தற்போது தயார்படுத்தி வருகின்றனர். இந்த பெருமை மிக்க தொடரில் விளையாடுவது ஒவ்வொரு அணிக்கும் தனி கௌரவம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலகக் கோப்பை தொடரை ஏதேனும் ஒரு அணி வெல்லும் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கணித்துள்ளனர். அதுபோல, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் தங்களது ஜெர்சியை அவ்வப்போது வெளியிட்டுள்ளனர். அவ்வாறு, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை தொடரில் தாங்கள் அணியவிருக்கும் ஜெர்சியை வெளியிட்டுள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.இங்கிலாந்து:
சந்தேகத்திற்கிடமின்றி, 12வது உலக கோப்பை தொடரை நடத்தும் அணியாக உள்ள இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை வகித்து வருகிறது. நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கூட இந்த அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. அவற்றில் குறிப்பிடும் வகையில், சர்வ சாதாரணமாக பெரும்பாலான போட்டிகளில் 350 ரன்கள் இந்த அணி குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எனவே, உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை உள்ள ஜெர்சியை நேற்று வெளியிட்டிருந்தது, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
1992 ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அணிந்த நீல நிற ஜெர்சியை மீண்டும் வடிவமைத்துள்ளது, இங்கிலாந்து அணி. நீல வர்ணங்கள் தோள்பட்டை களிலும் இங்கிலாந்து என்ற வார்த்தை ஜெர்சியின் நடுப்பகுதியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய குறியீடு வலது ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி அணிந்த ஜெர்ஸியில் இருந்த தேசிய கொடியை காட்டிலும் இது சற்று வேறுபட்டு உள்ளது. ஜெர்சி மாற்றியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி, இம்முறை உலக கோப்பை தொடரின் ஆதிக்கம் செலுத்த உள்ளது.
#2.பாகிஸ்தான்:
தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் அணி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் தோற்ற கையோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணி அணியும் புதுவகையான ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இது ஓரளவுக்கு இங்கிலாந்து அணியின் ஜெர்சியை காட்டிலும் நன்றாக உள்ளது என்று அந்நாட்டு ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
வழக்கம்போல், இந்த உடை பச்சை நிறத்தை பெரும்பாலான இடங்களில் கொண்டுள்ளது. முன்புறத்தின் வலது பக்கத்தில் உலகக்கோப்பை சின்னமும் இடது புறத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சின்னம் நட்சத்திரத்துடன் உருதுவில் சில வார்த்தைகள் எழுதியபடி உள்ளது. நடுப்பகுதியில் பாகிஸ்தான் என்ற வார்த்தை சரியான பச்சை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. அதே நிறம் ஜெர்சியில் பின்புறத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியும் சிறிய செவ்வக வடிவில் பின்புறத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உள்ள பெப்சி இடது கையில் பொறிக்கப்பட்டுள்ளது.