2019 உலகக்கோப்பை: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் குழப்பமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர்

India v Pakistan - ICC Cricket World Cup 2019
India v Pakistan - ICC Cricket World Cup 2019

நடந்தது என்ன?

இந்திய-பாகிஸ்தான் மோதிய போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமது எடுத்த மோசமான முடிவுகளுக்கு இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மிகப்பெரிய விருவிருப்பான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் இந்த செயல் அந்நாட்டு ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

உங்களுக்கு தெரியுமா...

இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் ஓல்ட் டெஃபோர்டில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் டக் வொர்த் லிவிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணியின் இந்த முக்கியமான வெற்றியின் மூலம் தனது அண்டை நாட்டிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் மோதியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிலைநாட்டுகிறது.

பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒரு மோசமான காலநிலையில் பௌலிங் தேர்வு செய்வது முதல் தவறு. இந்திய டாப் ஆர்டரின் ஆதிக்கத்தின் மூலம் அதிக ரன்கள் பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலமே பாகிஸ்தான் பாதி போட்டியை இழந்துவிட்டது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்‌.ராகுல் சிறந்த அடித்தளம் அமைத்து இந்திய அணியை அதிக ரன்கள் குவிக்க செய்தனர். பாகிஸ்தான் பௌலர்கள் ஆரம்பத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அளிக்க தவறினர். முகமது அமீர் தனது பங்களிப்பை நன்றாகவே பாகிஸ்தான் அணிக்கு அளித்து வந்தார்.

ரோகித் சிறப்பான ஷாட்களை அடித்து 113 பந்துகளில் 140 ரன்களை குவித்து ஹாசன் அலியிடம் தன் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை அடித்தது.

இந்திய பௌலர்கள் தங்களது பனியை சிறப்பாக செய்தனர்‌. குல்தீப் யாதவ் தனது சுழலின் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரட்டினார். மழையினால் 40 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியை தழுவியது.

கதைக்கரு

பல முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் போலவே சச்சின் டெண்டுல்கரும் போட்டியின் நுணுக்கங்களை ஆராய்ந்து வருவார். அதன்படி பாகிஸ்தான் கேப்டன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிக தவறான முடிவுகளை மேற்கொண்டதை தற்போது நடந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

"சஃப்ரஸ் அகமது இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிக குளப்பத்துடன் காணப்பட்டார். வஹாப் ரியாஜ் பௌலிங் செய்யும் போது ஷார்ட் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டரையும், ஷதாப் கான் பந்துவீசும் போது ஒரு ஸ்லிப்பையும் வைத்து தவறு செய்தார்.

இந்த மைதானத்தில் லெக் ஸ்பின்னர்கள் பந்துவீச சிரமப் படுவர். சரியான லென்த் மற்றும் லைனில் பந்து திரும்ப வாய்ப்பில்லை. இந்தப் போட்டியில் சஃப்ரஸ் அகமது அணுகுமுறை மிக மோசமாக இருந்தது.

பாகிஸ்தான் வீரர்களிடம் விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் விளையாட தவறுகின்றனர். முன்கூட்டியே ஒரு சரியான திட்டம் வகுப்பதை சஃப்ரஸ் அகமது மறந்துவிட்டார். அத்துடன் சரியாக பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்களை பயன்படுத்தவில்லை.

" இவர் எடுக்கும் முடிவுகள் முற்றிலும் தவறாகவே இப்போட்டியில் அமைந்துள்ளது. பந்து சரியான வேகத்தில் செல்லவில்லை என்றால் ஓவர் தி விக்கெட் திசையில் வீசுவதை பௌலர்கள் தவிர்க்க வேண்டும். வஹாப் ரியாஜ் "அரவுண்ட் தி விக்கெட்டிற்குள்" பந்துவீச முயற்சி செய்தார். ஆனால் அவர் வீசிய போது ஆட்டம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருந்ததால் பலனளிக்கவில்லை.

ஹாசன் அலி மட்டுமே நேரான திசையில் சரியாக பந்துவீசினார். சற்று வெவ்வேறு கோணத்தில் பந்துவீச்சை மாற்றி சற்று வேறு விதத்தில் ஹாசன் அலி பந்துவீசுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு மோசமான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

அடுத்தது என்ன?

இந்திய அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் ஜீன் 23 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது தற்போது கடினமாக உள்ளது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சற்று அதிக ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே டாப் 4 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது.

Quick Links