நடந்தது என்ன?
சிறப்பான அணியாக உருபெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவான் கட்டை விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக 2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். விரல் முறிவு குணமாக மேலும் 1 மாதம் ஆகும் என்ற காரணத்தால் இம்முடிவை எடுத்ததாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை புதன் அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணி நிர்வாக உறுப்பினர் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஷீகார் தவான் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தனது காயம் குறித்த புதிய தகவலையும், உலகக்கோப்பையின் மத்தியில் தான் வெளியேறியது பெரும் வருத்தத்தை அளிப்பதாகவும் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
ஷீகார் தவான் தற்போது முழு உடற்தகுதி பெற வாய்ப்பில்லை என்பதனை இந்திய அணி மேலாளர் சுனில் சுப்ரமணியம் உறுதி செய்துள்ளார்.
இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது,
"ஷீகார் தவானுக்கு இடது கை-யின் கட்டை விரல் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர் ஜீலை மத்தியில் தான் நலம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் ஐசிசி விதிப்படி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்டை பரிந்துரை செய்துள்ளோம்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் போது பேட் கமின்ஸ் வீசிய 9வது ஓவரை தவான் எதிர்கொண்டபோது இக்காயம் ஏற்பட்டது. கமின்ஸ் வீசிய பவுண்ஸர் நேரடியாக தவானின் விரலை தாக்கியது. உடனை இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபேர்ஹார்ட் அவருக்கு முதலுதவியை அளித்தார். பின்னர் போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட போது தவானிற்கு விரல் எலும்பு உடைந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கதைக்கரு
தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை காணும்போது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிதற்காக பெரும் வருத்தம் தரும் விதத்தில் தன் உணர்ச்சிகளை வெளிபடுத்தியுள்ளார்.
டிவிட்டரில் வெளியிட்ட காணோளியில் தவான் தெரிவித்திருப்பதாவது,
"நான் 2019 உலகக்கோப்பையில் இனி இல்லை, இந்த முடிவை பெரும் வருத்தத்துடன் நான் தெரிவிக்கிறேன். எதிர்பாராத விதமாக என்னுடைய கட்டை விரல் காயம் உடனே குணமாக வாய்ப்பில்லை. இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் தொடரும். எனக்கு பெரும் ஆதரவை அளித்த அணி நிர்வாகம், கிரிக்கெட்டை விரும்புவர்கள் மற்றும் என் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்!
அடுத்தது என்ன?
ரிஷப் பண்ட் தவானிற்கு காயம் ஏற்பட்ட அடுத்த சில நாட்களிலே இந்திய அணியுடன் இனைந்து விட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் நிர்வாகம் ரிஷப் பண்டின் உலகக்கோப்பையில் இனைவதற்கு ஜீன் 20 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. எனவே உலகக்கோப்பை தொடரில் ஜீன் 22 அன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தேர்வில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார்.