2019 உலக கோப்பை தொடரின் தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இந்திய அணி. இந்திய அணியின் பேட்டிங்கானது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெரிதும் நம்பியுள்ளது. எனவே, தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினால் 350 என்ற ஸ்கோரை எளிதில் எட்டும், இந்திய அணி. பவுலிங்கிலும் போதிய வலிமையுடன் இந்திய அணி காணப்படுகிறது.
கடந்த இரு போட்டிகளில் தோற்று உள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாட இருக்கின்றது. எனவே, பலம் மிகுந்த இந்த இரு அணிகளும் நாளைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற உள்ளன. நாளைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க முறையில் விளையாடும் இரு அணிகளையும் சேர்ந்த தலா ஒரு வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
#1.இம்ரான் தாஹிர் - தென்னாப்பிரிக்கா:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பந்துவீசி தொடக்க ஆட்டக்காரராக ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார், இம்ரான் தாஹிர். அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 67 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனின் விக்கெட்டையும் இவரே வீழ்த்தினார். வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இரு விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் பந்துவீசி ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஹம்மது மிதுன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார் . தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இம்ரான் தாஹிர், இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 166 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஒரே போட்டியில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. எனவே, நாளை நடைபெறும் போட்டியில் இவரின் ஆட்டம் திருப்புமுனையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#2.கே.எல்.ராகுல் - இந்தியா:
சமீப காலங்களில், உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்டிங்கில் யார் களமிறங்கப் போகிறார் என்பது பெரும் பேசும் பொருளாக இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பலதரப்பட்ட வீரர்கள் இந்த பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். ஆறு மாதங்களுக்கு முன்னரும் கூட இந்த இடத்தில் அம்பத்தி ராயுடு சிறப்பாக களமிறங்கி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும், இதே நேரத்தில் இந்திய தேர்வாளர்கள் இந்த இடத்தில் களமிறக்குவதற்கு அணியில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை இணைத்தனர். இருப்பினும், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து நான்காம் இடத்திற்கான தகுதியை நிரூபித்துள்ளார், கே.எல்.ராகுல். இவர் 99 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார். அந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் களை விரைவிலேயே இழந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் தோனி ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் உருவாக்கி சிறப்பாக அணியை மீட்டெடுத்தார். எனவே, தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சினை சீர்குலைக்கும் வகையில் இவரின் ஆதிக்கம் நாளை ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது