2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் 100 கோடியை இழக்கும் ஸ்பான்சர்கள்

India vs Pakistan
India vs Pakistan

நடந்தது என்ன?

உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் கிட்டத்தட்ட 100 கோடி நஷ்டத்தை ஸ்பான்சர்கள் சந்திக்க நேரிடும்.

உங்களுக்கு தெரியுமா...

2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டு எந்த முடிவும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து போட்டிகளும் அடங்கும்.

கதைக்கரு

மேகமூட்ட காலநிலையினால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ள போட்டிகளும் மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக ரசிகர்களுடன் சேர்ந்து ஸ்பான்ஷர்கள் மிகுந்த வருத்தத்தை சந்திப்பார்கள். பொதுவாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓவர்கள் முடிவில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 10 நொடிகளுக்கு 16 முதல் 18 லட்சம் வரை வசூலிப்பார்கள்.

இது இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் 25 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான உலகக்கோப்பை தொடரை காண ரசிகர்கள் முன்கூட்டியே அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் டிக்கெட்டுகள் விலை அதிகம் இருப்பதால் விட்டுச்சென்றாலும், இன்னும் சிலர் அதிக தொகையினை செலவிட்டு முன்பதிவு செய்துள்ளதாக பஜீசியா தெரிவித்துள்ளார்.

பஜீசியா லைன் மின்ட் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாவது,

"உலகில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள உலகக் கோப்பை போட்டியை காண என்றும் இல்லாததை விட இவ்வருடம் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுள்ளது. சிலர் தற்போது உள்ள டிக்கெட் விலையை விட கூடுதலாக பணம் செலவிட்டு டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். அத்துடன் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து போட்டிகளின் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இடையிடையே வெளியிடப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது."

சில ஸ்பான்ஷர்கள் அதிக அளவில் தங்கள் நிறுவன விளம்பரகளை வெளியிட அதிக பணத்தை செலவிட்டுள்ளது. குறிப்பாக இந்தியா & பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் அதிக தொகையினை முதலீடு செய்துள்ளனர். இந்த போட்டியுடன் ஒப்பிடும் போது மற்ற அணிகள் மோதும் போட்டியில் செலவிடப்படும் தொகை குறைவு தான்.

ஒளிபரப்பாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையினால் எந்த தடையுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தப் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இந்தியா மோதும் மற்றொரு போட்டியில் இலவசமாக நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட வேண்டும். அத்துடன் வேறு அணிகள் மோதும் ஒரு போட்டியிலும் வெளியிட. வேண்டும். அவ்வாறு ஒளிபரப்ப பட்டாலும் ஒரு விறுவிருப்பான போட்டிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் போன்று இருக்காது.

என பஜீசியா தெரிவித்துள்ளார்.

அடுத்தது என்ன?

இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின்படி மான்செஸ்டர், ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் வரும் ஞாயிறன்று 70 சதவீதம் மழை பொழிய வாய்ப்புள்ளது. உலகக் கோப்பையில் மழையினால் மற்றொரு போட்டி ரத்து ஆவதை காண ரசிகர்கள் மற்றும் ஸ்பான்ஷர்கள் கண்டிப்பாக விரும்பவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே மழையினால் உலகக் கோப்பை போட்டிகள் ரத்து ஆவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளது.

Quick Links

App download animated image Get the free App now