2015 உலகக் கோப்பை தொடர் பல ஆச்சரியங்களை அளித்தும் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியும் சிறந்த பொழுதுபோக்காகவும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்தது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் ஆகியோரின் துல்லியமான ஸ்விங் தாக்குதல்களை எத்தகைய கிரிக்கெட் ரசிகரும் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். சங்கக்காரா, கிறிஸ் கெய்ல், மார்டின் கப்டில் ஆகியோர் தமது அபார பேட்டிங் தாக்குதல்களை வெளிப்படுத்தினார். அந்த உலக கோப்பை தொடரில் பல வீரர்கள் ஓய்வு பெற்றனர். இம்முறை உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் தவறவிட்ட 3 கேப்டன்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.மைக்கேல் கிளார்க்:
கடந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை மைக்கேல் கிளார்க் வழிநடத்தினார். மேலும், அதுவே அவரது இறுதி உலக கோப்பை தொடர் ஆகும். அதன் பின்னர், நடைபெற்ற ஆஷஸ் தொடரோடு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 38 வயதான இவர், தமது சரிபாதி வயதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பங்காற்றியுள்ளார். 2013-2014 ஆண்டுகளில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. இருப்பினும், 2015 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுத்தந்தார், மைக்கேல் கிளார்க். இம்முறை உலகக் கோப்பை தொடரின் வர்ணனையாளராக இவர் செயல்படுகிறார்.
#2.பிரண்டன் மெக்கலம்:
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கலம், 2012ஆம் ஆண்டு முதல் கேப்டன் பதவியில் வகித்து வருகிறார். அணியில் இடம் பெற்றதிலிருந்து சிறப்பாக விளையாடி வரும் மெக்கலம், 2015 உலக கோப்பை தொடரில் மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தார். இவரின் ஆக்ரோஷமான ஆட்டம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக இருந்து வருகிறது. இவரது தலைமையில் நியூசிலாந்து அணி அந்த தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறியது.
#3.ஏ.பி.டிவில்லியர்ஸ்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஏ.பி.டிவில்லியர்ஸ் விளங்கினார். கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து இருந்தார். இவரது அறிவிப்பு கிரிக்கெட் உலகத்தை உலுக்கியது. அதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வழி நடத்தினார். வெற்றிகரமாக தென்னாப்பிரிக்க அணியை அரையிறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். துரதிஷ்டவசமாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. பல சாதனைகளை புரிந்த டிவில்லியர்ஸ், உலகக் கோப்பை தொடரை வெள்ளாளர்கள் மட்டுமே இவரது சாதனைப் பட்டியலில் இடம் பெறாத ஒன்றாகும்.