களத்தில் என்றுமே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி சிலமுறை அரவணைப்புடன் நடந்து இருக்கிறார். இதை நாம் பலமுறை சர்வதேச போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் கண்டுள்ளோம். விராட் கோலியின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் ரசிகர்கள் பலமுறை இவரை வெறுத்துள்ளனர். சமீபத்தில் கூட, விராட் கோலியை களத்தில் ஒரு பக்குவமற்றவர் போல் செயல்படுகிறார் என தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா கூறியுள்ளார். பேட்டிங்கிலும் கேப்டன்சியுலும் சிறந்து விளங்கும் விராத் கோலி, சிலமுறை தனது மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளார். ரசிகர்களின் மனதை வென்ற அவ்வாறான மூன்று சிறந்த தருணங்களை பற்றி இந்தத் தொகுப்பில் காண்போம்.
#3. 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் முகமது அமீரை வரவேற்ற விராட் கோலி:
கிரிக்கெட் போட்டியில் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். இதனால் பல ரசிகர்கள் இவருக்கு எதிராக ஸ்டேடியத்தில் கரகோசமிட்டுள்ளனர். 27 வயதான அமீரை சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் வரவேற்கும் விதமாக விராத் கோலி செயல்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடும் போது விராத் கோலி கூறிய வார்த்தைகள் இவை,
"முகமது அமீர் ஒரு உலகத் தரத்திலான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஐந்து ஆண்டு காலமாக இவர் தடையில் இருந்து உள்ளார். இவர் உலகின் தலைசிறந்த மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்வார். இவருக்கு அற்புதத் திறமைகள் உள்ளது. அதே சமயம், தனது வேகத்திலும் யார்க்கர் வகை பந்துகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு நான் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்".
கடினமாக உழைத்து மீண்டும் திரும்பியுள்ளார் என்றும் விராட் கோலி கூறினார். மனம் நெகிழ்ந்த தனது வார்த்தைகளை கூறி முகமது அமீரை வரவேற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் கூட அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளார், இந்த முகமது அமீர்.
#2. காயமடைந்த ஹஸீப் ஹமீதுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய விராட் கோலி:
2016ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இங்கிலாந்து அணி. அப்போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தனது அறிமுகத்தை கண்ட இங்கிலாந்து அணியின் இளம் பேட்ஸ்மேனான ஹஸீப் ஹமீது 44 என்ற பேட்டிங் சராசரியோடு மொத்தம் 219 ரன்கள் குவித்துள்ளார். மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் வீசிய பந்து இவரின் இடது கையைப் பதம் பார்த்தது. கடும் வலியையும் பொருட்படுத்தாது அந்த இளம் பேட்ஸ்மேன் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி 59 ரன்கள் குவித்தார். இதனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த விராட் கோலி, இந்த இளம் வீரரை வாழ்த்தினார்.
"விரைவாக உடல் நலம் திரும்புவார் என நம்புகிறேன். தனது பத்தொன்பதாவது வயதிலேயே சிறந்த கட்டத்தை நெருங்கியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் இணைந்து விளையாடிய விதம் சிறந்த பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. அவர் என்ன நினைத்தாரோ அதனை அற்புதமாக செய்து காட்டியுள்ளார்"
என்றார் கோலி. தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சோபிக்க தவறியதன் பின்னர், சர்வதேச போட்டிகளிலும் ஹஸீப் களமிறங்கவில்லை.
#1. உலக கோப்பையில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு ஆதரவாக செயல்பட்ட விராட் கோலி:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தொடருக்கு பின்னர், உலக கோப்பை தொடரில் களம் புகுந்தார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடி கொண்டிருக்கும்போது, சில இந்திய ரசிகர்கள் இவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனை கண்ட விராட் கோலி, இந்திய ரசிகர்களிடம் சென்று இவ்வாறு செயல்படாதீர்கள் என்று கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார். இதன் பின்னர் அளித்த பேட்டி ஒன்றில்,
"பல இந்திய ரசிகர்கள் இங்கு வந்துள்ளனர். நான் இவர்களின் போக்கை தவறான உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என நினைத்தேன். எனது பார்வையில் ஸ்டீவன் ஸ்மித் இவ்வாறு நடத்தப்படக்கூடாது. அவர் கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகிறார். ஒருவேளை இது போன்ற ஒரு நிகழ்வு எனக்கு ஏற்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். அதுவும் ஏற்பட்டிருக்கும். அதன் பின்னர், திரும்பியபோது தொடர்ந்து எனக்கு எதிராக கோசங்கள் இருந்தால் நான் இது போன்று செயல்படுவதை விரும்பமாட்டேன்".
உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இவ்வாறு செயல்பட்டது சமீபத்தில் மிகவும் பேசும் பொருளானது. இதன் மூலம், இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்றார்.