#2.இந்தியா Vs நியூசிலாந்து, அரையிறுதி ஆட்டம்:
இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் கடந்த வாரம் மோதின. முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்திருந்தபோது மழை வந்து குறுக்கிட்டது. இதனால் மீண்டும் ஆட்டத்தை அந்நாளில் தொடர முடியவில்லை. எனவே, ஆட்டம் அடுத்த நாளை நோக்கி தள்ளிப்போனது. இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் மீதமிருந்த ஓவர்களில் பேட்டிங் செய்து 240 என்ற இலக்கை நிர்ணயித்தது, நியூசிலாந்து. எனவே, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, எவரும் எதிர்பார்த்திராத வகையில் தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியின் திறமையான வியூகங்களால் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா ஒரு ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 3 விக்கெட்களை இழந்த பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ஓரளவுக்கு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆனால், மீண்டும் ஒரு விக்கெட் இழப்பாக தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் காலி செய்தார். மீண்டும் இந்திய அணியின் பேட்டிங் கவலைக்குரிய வகையில் அமைந்தது. இதனால், ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய பேண்ட் மற்றும் பாண்டியா ஜோடி நிதானமாக விளையாடி ஓரளவுக்கு சரிவிலிருந்து அணியை மீட்டது.
இருப்பினும் இவர்களின் விக்கெட்களை இழந்த பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் தோனி இணை ஆட்டத்தின் போக்கை சற்று மாற்றியது. ஏழாம் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 106 ரன்களை சேர்த்தனர். ரவிந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து முக்கியமான 48 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த மகேந்திர சிங் தோனி ரன் அவுட் செய்யப்பட்டார். இதற்கு அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் எனக்கருதி இறுதி ஆட்டத்தின் மொத்த டிக்கெட்டுகளில் 29 சதவீதத்தை இந்திய ரசிகர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கை அனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டது.
#1.மனமுடைந்த மார்ட்டின் கப்டில்:
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமது அபாரமான ரன் அவுட் மூலம் தோனியை ஆட்டமிழக்கச் செய்த மார்ட்டின் கப்டில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தேவையில்லாமல் ஒவ்வொரு ஓவர் த்ரோவ் மூலம் 4 ரன்களை அள்ளித் தந்தது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சற்று சாதகமாக முடிந்தது. அதுமட்டுமல்லாமல் நேற்று நடைபெற்ற ஆட்டம் டையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 16 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதன் பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் இரு ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டு ஜோஸ் பட்லர் மூலம் அபாரமாக மாட்டின் கப்தில் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பின்னர், களத்திலேயே மார்ட்டின் கப்தில் கதறிய காட்சி கிரிக்கெட் உலகையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைக்கூட கேலி செய்யும் வகையில் ரசிகர்கள் சிலர் அரையிறுதி ஆட்டத்தில் தோனியை ரன் அவுட் செய்த மாட்டின் கப்பில் ரன் அவுட் மூலம் தனது விக்கெட்டை இழந்ததால், கர்மா தனது பணியை செய்துள்ளது என விமர்சித்து வருகின்றனர்.