உலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய நிகழ்வுகள்

India and New Zealand haven't lost a game up till now
India and New Zealand haven't lost a game up till now

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி ஜீன் 13 அன்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோத உள்ளன. இப்போட்டியில் எந்த அணி வெல்லுமோ அந்த அணி உலகக் கோப்பை தொடரில் தற்போது வரை தோற்காமல் விளையாடும் அணி என்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. மறுமுனையில் நியூசிலாந்து அணி தனது முதல் 3 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாகவும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சற்று நெருக்கடியை சந்தித்தும் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளிலும் நன்றாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். ஒரு நீண்ட தொடருக்கு இதுதான் மிக முக்கியமானதாகும். இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், நியூசிலாந்து அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் வலிமை வாய்ந்தவர்கள். கானே வில்லியம்சன், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரோஸ் டெய்லர் போன்ற வீரர்கள் மிகவும் அதிரடியான விளையாடி ரன்களை குவிப்பதில் வல்லவர்கள். இரண்டு அணியிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளும் பௌலர்கள் உள்ளனர்.

இந்த இரு அணிகளும் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதி எந்த அணியின் பௌலிங் மற்றும் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என நிருபிப்பார்கள். எனவே மற்றொரு அதிக ரன்களை குவிக்கும் போட்டியாக இருக்கும். இந்த போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 நிகழ்வுகளை பற்றி காண்போம்.

#1 இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் vs இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

Trent Boult has troubled India's Top three a number of times
Trent Boult has troubled India's Top three a number of times

இந்திய டாப்-3 பேட்ஸ்மேன்களுக்கு பலவீனம் என ஏதும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இடது கை ஸ்விங் வேகப்பந்து வீச்சில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். டாப் 3 பேட்ஸ்மேன்கள் குறிப்பாக ஒரே பௌலரிடம் தடுமாற்றத்தை சந்திக்கவில்லை. ஆனால் இடது கை ஸ்விங் பௌளர்கள் போன்ற சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் தற்போது வரை தடுமாறிக் கொண்டுதான் உள்ளனர். இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக 2017ல் நடந்த சேம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியை கூறலாம். இப்போட்டியில் முகமது அமீர் தனது இடது கை ஸ்விங் பந்துவீச்சின் மூலம் இந்திய பேட்டிங்கை கட்டுபடுத்தினார். ஆஸ்திரேலிய அணியிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் ஸ்டார்க் வேகப்பந்து வீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.

டிரென்ட் போல்ட் பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவானின் விக்கெட்டை வீழ்த்தினார். எனவே இவரது பந்துவீச்சிற்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். டிரென்ட் பிரிட்ஜ் மைதானம் ஃபிளாட் பிட்ச் என்பதால் டிரென்ட் போல்டின் ஸ்விங் பந்துவீச்சு எடுபட வாய்ப்பு மிக குறைவு. ஆனால் டிரென்ட் போல்ட் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர், எனவே அவரது பௌலிங் நுணுக்கத்தை சரியாக செயல்படுத்தி விக்கெட் வீழ்த்த வாய்ப்புள்ளது. அத்துடன் இந்திய டாப் 3 பேட்டிங் நுணுக்கங்கள் இவருக்கு நன்றாக தெரியும் என்பதால் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் கவனத்துடன் இந்திய டாப் ஆர்டர் செயல்படும். தொடக்க ஓவரில் தவான் மற்றும் ரோகித் சர்மாவிற்கு எதிராக டிரென்ட் போல்டின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

#2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் vs நியூசிலாந்து மிடில் ஆர்டர்

The Kiwis have a strong middle-order with good players of spin
The Kiwis have a strong middle-order with good players of spin

உலகின் வலிமையான மிடில் ஆர்டர் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதன்மை அணியாக உள்ளது. நியூசிலாந்து அணியில் கானே வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் போன்ற வலிமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஸ் டெய்லர் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோரின் பார்டனர் ஷீப்பில் நியூசிலாந்து பல முறை வெற்றி பெற்றுள்ளது. ரோஸ் டெய்லர் தற்போது உலகின் சிறந்த நம்பர்-4 பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இவரது சீரான ஆட்டத்திறன் ரோஸ் டெய்லரின் வலிமையாகும்.

எதிரணியின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்களாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் திகழ்கின்றனர். நிறைய போட்டிகளில் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளனர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள். சகால் மற்றும் குல்தீப் இனைந்து செயல்படுவதைக் காண மிகவும் அருமையாக இருக்கும். டாம் லேதம் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொள்ளும் திறமை உடையவர்கள். கானே வில்லியம்சன் தாழ்வான பந்தை சரியான திசையில் விளாசுவார், டாம் லேதம் ஸ்விப் ஷாட் சரியாக விளையாடுவார். நியூசிலாந்து மிடில் ஆர்டருக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

#3 ஹர்திக் பாண்டியா vs மிட்செல் சான்ட்னர்

Hardik Pandya loves taking on the spinners
Hardik Pandya loves taking on the spinners

இப்போட்டி அதிரடி பேட்டிங்கிற்கும், நுணுக்கமான பௌலிங்கிற்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போட்டியாகும். மிட்செல் சான்ட்னர் உலகின் ஸ்மார்ட் பௌலராக உள்ளார். ஆட்டத்திற்கு ஏற்றவாறு தகுந்த பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வார்கள். இவருக்கு பந்தை எந்த திசையிலும், எந்த நுணுக்கத்தில் வீசுவது என்பதைப் பற்றி நன்கு அறிந்தவர்.

ஆனால் இந்திய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா சுழற்பந்து வீச்சிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். நிறைய சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தொடர் சிக்ஸர்களை விளாசும் திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடி நம்பர்-4 ல் ஹர்திக் பாண்டியா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போலவே இப்போட்டியிலும் அமைந்தால் கண்டிப்பாக மிட்செல் சான்ட்னர் மற்றும் சில சுழற்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்.

மிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சிற்கு எதிராக ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்திறனை காண இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil