#2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் vs நியூசிலாந்து மிடில் ஆர்டர்
உலகின் வலிமையான மிடில் ஆர்டர் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதன்மை அணியாக உள்ளது. நியூசிலாந்து அணியில் கானே வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் போன்ற வலிமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஸ் டெய்லர் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோரின் பார்டனர் ஷீப்பில் நியூசிலாந்து பல முறை வெற்றி பெற்றுள்ளது. ரோஸ் டெய்லர் தற்போது உலகின் சிறந்த நம்பர்-4 பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இவரது சீரான ஆட்டத்திறன் ரோஸ் டெய்லரின் வலிமையாகும்.
எதிரணியின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்களாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் திகழ்கின்றனர். நிறைய போட்டிகளில் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளனர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள். சகால் மற்றும் குல்தீப் இனைந்து செயல்படுவதைக் காண மிகவும் அருமையாக இருக்கும். டாம் லேதம் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொள்ளும் திறமை உடையவர்கள். கானே வில்லியம்சன் தாழ்வான பந்தை சரியான திசையில் விளாசுவார், டாம் லேதம் ஸ்விப் ஷாட் சரியாக விளையாடுவார். நியூசிலாந்து மிடில் ஆர்டருக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
#3 ஹர்திக் பாண்டியா vs மிட்செல் சான்ட்னர்
இப்போட்டி அதிரடி பேட்டிங்கிற்கும், நுணுக்கமான பௌலிங்கிற்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போட்டியாகும். மிட்செல் சான்ட்னர் உலகின் ஸ்மார்ட் பௌலராக உள்ளார். ஆட்டத்திற்கு ஏற்றவாறு தகுந்த பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வார்கள். இவருக்கு பந்தை எந்த திசையிலும், எந்த நுணுக்கத்தில் வீசுவது என்பதைப் பற்றி நன்கு அறிந்தவர்.
ஆனால் இந்திய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா சுழற்பந்து வீச்சிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். நிறைய சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தொடர் சிக்ஸர்களை விளாசும் திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடி நம்பர்-4 ல் ஹர்திக் பாண்டியா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போலவே இப்போட்டியிலும் அமைந்தால் கண்டிப்பாக மிட்செல் சான்ட்னர் மற்றும் சில சுழற்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்.
மிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சிற்கு எதிராக ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்திறனை காண இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.