நாளை நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் தான் இங்கிலாந்து அணியின் அறையிறுதி வாய்ப்பு உள்ளது. இரு முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு தொடரில் எவராலும் தோற்கடிக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. எனவே, நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் உத்வேகத்தில் உள்ளது. இம்முறை உலகக் கோப்பை தொடரை நடத்த அணியான இங்கிலாந்து கடந்த 60 போட்டிகளில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை கண்டதில்லை. ஆனால், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி கண்ட இங்கிலாந்து நாளைய போட்டியில் தோல்வி பெற்றால், தொடர்ந்து அரையிறுதி வாய்ப்ப்பில் நீடிப்பது சந்தேகம் தான். தற்போது கடும் நெருக்கடியில் உள்ள இங்கிலாந்து நாளைய போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 12 மாதங்களாக பல்வேறு போட்டிகளில் விளையாடி திடமாக உள்ள இங்கிலாந்து, இதுபோன்ற தொடர் தோல்விகளால் துவண்டு விடப்போவதில்லை. எனவே, நாளைய போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிப்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்திருக்கின்றது.
#3.இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சோப்ரா ஆர்ச்சர்:
உலக கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடி உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார், ஆல்ரவுண்டர் சோப்ரா ஆர்ச்சர். இவரது அதிவேக பந்து வீச்சு தாக்குதலால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இன்னிங்சில் எந்த கட்டத்திலும் வெற்றிகரமாக பந்துவீசும் ஆற்றல் பெற்ற சோப்ரா ஆர்ச்சர், எதிரணியினருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளார். நடப்பு தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளரும் இவரே. இதுவரை 16 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர் இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை கைப்பற்ற நேர்ந்தால், அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, நாளைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர் நிச்சயம் ஒரு அச்சுறுத்தலாக விளங்குவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
#2.இங்கிலாந்து அணியின் பலமிகுந்த பேட்டிங் வரிசை:
2019 உலகக் கோப்பை தொடரின் சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட அணிகளில் ஒன்று, இங்கிலாந்து. தொடர் துவங்குவதற்கு முன்பு 400 ரன்களை கூட எளிதில் குவிக்கும் அணியாக விளங்கியது, இங்கிலாந்து. ஏனெனில், அணியில் உள்ள 11 வீரர்களும் பேட்டிங்கில் மிரட்டும் வல்லமை படைத்துள்ளனர். தொடர்ச்சியாக 7 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் மற்றும் ஒரே அணி சாதனையையும் படைத்துள்ளது, இங்கிலாந்து அணி. கடந்த இரு போட்டிகளிலும் இவர்களது பேட்டிங்கில் எடுபடாவிட்டாலும் இந்திய அணிக்கு எதிரான போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இவர்களின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும். இதற்கு நேர்மாறாக, கடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இணையாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட உள்ளனர்.
#1.இந்திய அணியில் தடுமாறும் மிடில் ஆர்டர்:
2019 உலகக் கோப்பை தொடரில் நான்காம் இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் யார் என்ற குழப்பம் சற்று நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கே.எல்.ராகுல் இத்தகைய முக்கியமான இடத்தில் கடந்த இறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். அதன் பிறகு. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா உடன் இணைந்து தொடர்ந்து விளையாடி வருகிறார், கே.எல்.ராகுல். இதன் காரணமாக, நான்காம் இடத்தில் விஜய் சங்கர் மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டும் தொடர்ந்து தனது வாய்ப்பினை வீணடித்து வருகிறார். தோனி மற்றும் கேதர் ஆகியோர் தங்களது ஆட்டத்தை சீரிய முறையில் வெளிப்படுத்தி வந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சற்று சவால் மிகுந்ததாகும். எனவே, பலம் மிகுந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால், மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். கடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று தடுமாறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.