#1.இந்திய அணியில் தடுமாறும் மிடில் ஆர்டர்:
2019 உலகக் கோப்பை தொடரில் நான்காம் இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் யார் என்ற குழப்பம் சற்று நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கே.எல்.ராகுல் இத்தகைய முக்கியமான இடத்தில் கடந்த இறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். அதன் பிறகு. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா உடன் இணைந்து தொடர்ந்து விளையாடி வருகிறார், கே.எல்.ராகுல். இதன் காரணமாக, நான்காம் இடத்தில் விஜய் சங்கர் மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டும் தொடர்ந்து தனது வாய்ப்பினை வீணடித்து வருகிறார். தோனி மற்றும் கேதர் ஆகியோர் தங்களது ஆட்டத்தை சீரிய முறையில் வெளிப்படுத்தி வந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சற்று சவால் மிகுந்ததாகும். எனவே, பலம் மிகுந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால், மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். கடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று தடுமாறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.