2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகள்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாசிம் அம்லா மற்றும் குவின்டன் டிகாக்கை விக்கெட்டுகளை ஆட்டத்தின் ஆரம்பத்திலே ஜாஸ்பிரிட் பூம்ரா வீழ்த்தினார்.

இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாட முற்பட்ட போது சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த போது கிறிஸ் மோரிஸ் மற்றும் காகிஸோ ரபாடா ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை 227ஆக உயர்த்தினர்.

ஒரு சுமாரான இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவானை, காகிஸோ ரபாடா வெளியேற்றினார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பியபோது, கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுலுடன், ரோகித் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் எம்.எஸ்.தோனியுடனும் இனைந்து ரோகித் விளையாடினார். இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிறப்பான சதத்தினை விளாச, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ரோகித் சர்மா 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை விளாசினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இருப்பினும் விராட் கோலியின் அற்புதமான கேப்டன்ஷீப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நாம் இங்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகளை பற்றி காண்போம்.

#3 அணித் தேர்வு

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

உலகக் கோப்பையில் விராட் கோலி இந்திய அணியை எவ்வாறு தேர்வு செய்வார், மற்றும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் பல நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்து வந்தது. அத்துடன் அவ்வப்போது நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது நம்பிக்கை வீரர்களை தெரிவிப்பார். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை விராட் கோலி நம்பி இந்திய ஆடும் XI-ல் தேர்வு செய்தார். கோலியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு சற்று வெறுப்பை ஏற்படுத்தியது அத்துடன் இது தவறான முடிவாக அமையப் போகிறது என அனைத்து ரசிகர்களும் எண்ணியிருந்தனர்.

புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ராவுடன் சேர்ந்து அதிரடி பந்துவீச்சை தொடக்கத்தில் வெளிபடுத்தினார்‌. குல்தீப் யாதவும் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் அணித்தேர்வை ரசிகர்கள் வெறுத்து வந்தனர். ஆனால் இந்தப் போட்டியில் அவரின் அணித்தேர்வு சிறப்பானதாக இருந்தது. விராட் கோலி தான் தேர்வு செய்யும் ஆடும் XI தவறாக அமையாது என நிருபித்துள்ளார்.

#2 முதல் 10 ஓவரில் அதிரடியான ஃபீல்டிங்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஜாஸ்பிரிட் பூம்ரா தனது முதல் ஓவரை வீச வந்த போது அவரது பந்துவீச்சு அதிக வேகத்தில் வந்தது. இதனால் பேட்ஸ்மேன் அதிகமாக தடுமாறினார்‌. எனவே விராட் கோலி இரண்டு ஸ்லிப்புடன் தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். ஹாசிம் அம்லா இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.

விராட் கோலி முதல் 8 ஓவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஃபீல்டிங் செட் செய்வது போல அமைத்திருந்தார். ஒரு கல்லி, இரண்டு ஸ்லிப் மற்றும் தெர்ட் மேன் திசையில் யாரும் இல்லாமலும், வலது புறத்தில் அதிக இடம் விட்டும் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். விராட் கோலியின் இந்த அற்புத முடிவு சிறப்பாக செட் ஆனது. ஜாஸ்பிரிட் பூம்ரா வீசிய 6வது ஓவரில் டிகாக் எதிர்கொள்ள அதிக தடுமாற்றத்தை வெளிபடுத்தினார். அப்போது 2 ஸ்லிப்புகள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

பூம்ரா ஓவரில் அதிகமாக டிகாக் தடுமாறி வந்த காரணத்தால் 6வது ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். கேப்டன் கோலி எதிர்பார்த்த படியே டிகாக் சரியாக கோலி நின்ற இடத்தில் பந்தை தட்டிவிட சட்டென்று கேட்ச் பிடித்தார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலியின் இந்த அற்புதமான கேப்டன்ஷீப் அதிகம் குறிப்பிட்டு பேசப்பட்டு வந்தது.

#3 சுழற்பந்து வீச்சாளர்களை சரியான ஓவரில் களமிறக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

விராட் கோலியின் கேப்டன் ஷீப் அதிகம் குறிப்பிடும் படியாக அமைந்த மற்றொரு நிகழ்வு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்து வந்ததுதான். விராட் கோலி, யுஜ்வேந்திர சகாலை முதல் பவர் பிளேவிற்கு பிறகு எடுத்து வந்தார். சிறப்பான மற்றும் அதிரடியான பந்துவீச்சை மேற்கொண்டு ரன்களை கட்டுபடுத்தினார் குல்தீப்.

அதன்பின் பந்துவீசிய சகால் மாயஜால சுழலை வெளிகொண்டு வந்தார்‌. சாதுரியமாக செயல்பட்ட சகால், ஆடுகளத்தின் டரிஃப்ட் மற்றும் பவுண்ஸை சரியாக பயன்படுத்திக் கொண்டார். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இனைந்து தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரை சிதைத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

யுஜ்வேந்திர சகால் 10 ஓவர்களை வீசி 51 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களை வீசி 46 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலியின் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோருக்கு எப்பொழுதும் இடம் இருக்கும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் காப்பற்றி உள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now