#2 முதல் 10 ஓவரில் அதிரடியான ஃபீல்டிங்

தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஜாஸ்பிரிட் பூம்ரா தனது முதல் ஓவரை வீச வந்த போது அவரது பந்துவீச்சு அதிக வேகத்தில் வந்தது. இதனால் பேட்ஸ்மேன் அதிகமாக தடுமாறினார். எனவே விராட் கோலி இரண்டு ஸ்லிப்புடன் தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். ஹாசிம் அம்லா இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.
விராட் கோலி முதல் 8 ஓவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஃபீல்டிங் செட் செய்வது போல அமைத்திருந்தார். ஒரு கல்லி, இரண்டு ஸ்லிப் மற்றும் தெர்ட் மேன் திசையில் யாரும் இல்லாமலும், வலது புறத்தில் அதிக இடம் விட்டும் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். விராட் கோலியின் இந்த அற்புத முடிவு சிறப்பாக செட் ஆனது. ஜாஸ்பிரிட் பூம்ரா வீசிய 6வது ஓவரில் டிகாக் எதிர்கொள்ள அதிக தடுமாற்றத்தை வெளிபடுத்தினார். அப்போது 2 ஸ்லிப்புகள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
பூம்ரா ஓவரில் அதிகமாக டிகாக் தடுமாறி வந்த காரணத்தால் 6வது ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி தன்னை மூன்றாவது ஸ்லிப்பாக இனைத்துக் கொண்டார். கேப்டன் கோலி எதிர்பார்த்த படியே டிகாக் சரியாக கோலி நின்ற இடத்தில் பந்தை தட்டிவிட சட்டென்று கேட்ச் பிடித்தார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலியின் இந்த அற்புதமான கேப்டன்ஷீப் அதிகம் குறிப்பிட்டு பேசப்பட்டு வந்தது.