#3 சுழற்பந்து வீச்சாளர்களை சரியான ஓவரில் களமிறக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது

விராட் கோலியின் கேப்டன் ஷீப் அதிகம் குறிப்பிடும் படியாக அமைந்த மற்றொரு நிகழ்வு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்து வந்ததுதான். விராட் கோலி, யுஜ்வேந்திர சகாலை முதல் பவர் பிளேவிற்கு பிறகு எடுத்து வந்தார். சிறப்பான மற்றும் அதிரடியான பந்துவீச்சை மேற்கொண்டு ரன்களை கட்டுபடுத்தினார் குல்தீப்.
அதன்பின் பந்துவீசிய சகால் மாயஜால சுழலை வெளிகொண்டு வந்தார். சாதுரியமாக செயல்பட்ட சகால், ஆடுகளத்தின் டரிஃப்ட் மற்றும் பவுண்ஸை சரியாக பயன்படுத்திக் கொண்டார். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இனைந்து தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரை சிதைத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
யுஜ்வேந்திர சகால் 10 ஓவர்களை வீசி 51 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களை வீசி 46 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலியின் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகியோருக்கு எப்பொழுதும் இடம் இருக்கும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் காப்பற்றி உள்ளனர்.