Create
Notifications
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று விஷயங்கள் 

  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து தனது 100% வெற்றி வாய்ப்பினை தக்க வைக்குமா இந்தியா? 
SENIOR ANALYST
சிறப்பு
Modified 16 Jun 2019, 14:12 IST

Three things India need to do to win against Pakistan
Three things India need to do to win against Pakistan

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ரசிகர்களால் ஒரு கிரிக்கெட் போட்டிக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. இவ்விரு நாடுகளையும் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு தொடரின் இறுதிப்போட்டிக்கு இணையாக இவ்வகை ஆட்டத்தினை ரசிக்கின்றனர். இதுவரை உலக கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியுள்ளஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடி உள்ளது. இதன் மூலம், உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் தொடர்ந்து நூறு சதவீத வெற்றி வாய்ப்பினை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் கொண்டுள்ளது, இந்திய அணி. அவ்வாறு, இன்று நடைபெறும் 2019 உலக கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது, இந்திய அணி. இவ்விரு அணிகளையும் ஒப்பிடும்போது சிறப்பான மற்றும் ஒரு பலமான அணியாக திகழ்கின்றது, இந்தியா. எனவே, இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற மேற்கொள்ள உள்ள மூன்று காரணிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

#1.முதல் 10 ஓவர்களில் ரோகித் சர்மா அல்லது விராட் கோலியின் விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டும்: 

Bangladesh v India - ICC Champions Trophy Semi Final
Bangladesh v India - ICC Champions Trophy Semi Final

கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பேட்டிங் தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பை பெருமளவில் எடுபட்டுள்ளது. அது போல, முதல் 10 ஓவர்களில் ஏதேனும் ஒரு விக்கெட்டை இழக்காமல் தொடர்ந்து விளையாடினால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருந்திருக்கின்றது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் உலக கோப்பை தொடரிலிருந்து சில வாரங்களுக்கு விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் ரோஹித் சர்மா உடன் இணைந்து பல ஆட்டங்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித் தந்துள்ளார். தற்போது தவானுக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் இணைந்து மாற்று தொடக்க ஆட்டக்காரரான ராகுல் தொடக்கம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவர்களது கூட்டணி எவ்வாறு இன்றைய போட்டியில் அமையும் என்பதை சற்று பொறுத்திருந்து தான் காண வேண்டியுள்ளது. மேகங்களால் சூழப்பட்ட ஓல்டு டிரஃப்ரோட் மைதானத்தில் முதல் 10 ஓவர்கள் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில்,, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் நடப்புத் தொடரில் அற்புதமாக செயல்பட்டு விக்கெட்களை கைப்பற்றி வருகிறார். ஒருவேளை இவர் ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினால் கூட இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டாகாது. ஆனால், துரதிஷ்டவசமாக ரோகித் சர்மா அல்லது ராகுல் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கும் விராட் கோலி ஆகியோரில் யாரேனும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் கூட இந்திய அணிக்கு அது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும். இதுவரை ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் தன்னை நிரூபித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

#2.மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இந்திய அணி: 

Mohammed Shami
Mohammed Shami's addition can prove the key to beating Pakistan

நேற்று மழை பெய்தமையால் சற்று ஈரப்பதமுள்ள இந்த மைதானத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேகப்பந்து வீச்சுக்கு சற்று எடுபடும் என கூறியிருக்கிறார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக இந்திய அணியிலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி சேர்க்கப்பட்டால் மட்டுமே இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பு வலுப்பெறும். ஏற்கனவே, அணியில் உள்ள பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் இணைந்து முகமது சமி தனது உலக தரத்திலான பந்துவீச்சை அளிக்க உள்ளார். இங்கிலாந்து சீதோஷ்ண நிலைகள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கும் வேளையில் இவர்கள் மூவரும் இணைந்து பாகிஸ்தான் பேட்டிங் தரப்பினை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


1 / 2 NEXT
Published 16 Jun 2019, 14:12 IST
Advertisement
Fetching more content...
Get the free App now
❤️ Favorites Edit