நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடர்ந்து புள்ளிப் பட்ட்யலில் முன்னிலை வகிக்கிறது நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா முதலாவதாக பேட்டிங் செய்து 386 ரன்களை குவித்து சாதனை படைத்தது. அதன் பின்னர், களமிறங்கிய வங்கதேச அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தமையால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி தனது முதல் விக்கெட்டான சௌமியா சர்க்காரின் விக்கெட்டை விரைவிலேயே இழந்து தவித்தது.
அதன் பின்னர், களமிறங்கிய ஷகிப் அல்-ஹசன் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் உடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய தொடர்ந்து தனது துல்லிய பந்துவீச்சு தாக்குதலால் வங்கதேசம் அணியை நெருக்கடிக்கு ஆழ்த்தியது. மஹ்மதுல்லா உடன் இணைந்த விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகர் ரஹீம் நல்லதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய முஸ்திபூர் ரஹிம் சதத்தை அடித்து இருந்தாலும் தமது அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை.
இதற்கு முன்னர், முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் இணை முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து இம்முறையும் சிறப்பாக விளையாடிய வார்னர் பின்னர் உஸ்மான் கவாஜா உடன் இணைந்து சதத்தினை குவித்தார். தனது முதலாவது இரட்டைச் சதம் அடிப்பார் என பெரிதும் நம்பிய வேலையில் பகுதிநேர பந்துவீச்சாளரான சவுமியா சர்க்காரிடம் தனது விக்கெட்டை இழந்தார், டேவிட் வார்னர். அதன் பின்னர், களமிறங்கிய கிளைன் மேக்வெல் 10 பந்துகளை சந்தித்து 32 ரன்களை குவித்து அமர்களப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதிக்கட்ட நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து கைப்பற்றினர்.
இந்த போட்டியில் குறிப்பிடும் வகையில், 147 பந்துகளில் 166 ரன்கள் குவித்தார். டேவிட் வார்னர் இவரது இன்னிங்சில் 14 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடிக்கப்பட்டன. இதன் மூலம், 2019 உலக கோப்பை தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார், டேவிட் வார்னர். உலகக் கோப்பை போட்டிகளில் இரு முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார், டேவிட் வார்னர். எனவே, இத்தகைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரை ட்விட்டர் வாசிகள் பலரும் தங்களது பாராட்டை வெளிப்படுத்தினர். எனவே, அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட சில டிவிட்டுகளை பின்வருவனவற்றில் பற்றி காண்போம்.