நடந்தது என்ன?
ஸ்டிவன் ஸ்மித் பவுண்டரி லைனிற்கு அருகில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது இந்திய ரசிகர்களால் ஏளனப்படுத்தப் பட்டார். அப்போது தான் ஸ்டிவன் ஸ்மித்-திடம் வருத்தம் தெரிவித்ததை செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
கடந்த வருடம் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்டிவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டனர். இந்த கிரிக்கெட் தடை உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர். தடைக்கு பிறகு இவர்கள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
கதைக்கரு
இந்திய அணி தனது இரண்டாவது உலகப் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று மோதியது. இந்தப் போட்டியில் இந்திய இன்னிங்ஸின் போது ஸ்டிவன் ஸ்மித் பவுண்டரி லைனிற்கு முன் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர்கள் இவரை "மோசடிக்காரர்" என்ற வாரத்தைகளால் தாக்கினார்கள். இதைக் கண்ட விராட் கோலி உடனே இந்திய ரசிகர்களிடம், "தயவுசெய்து நிறுத்துங்கள், என்னை சரியாக உற்சாகப்படுத்துங்கள்" என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆட்டநேர முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி இந்த நிகழ்வினை பற்றி தெரிவித்துள்ளார்.
"நிறைய இந்திய ரசிகர்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்த வந்தார்கள். இந்திய ரசிகர்களின் ஒரு தவறான ஒரு செயலை செய்வதை நான் விரும்பவில்லை. இதனை நேர்மையாக நான் கூறுகிறேன். ஸ்மித்தை ஏளனப்படுத்தும் அளவிற்கு அவர் அவ்வளவு பெரிய தவறு ஏதும் செய்யவில்லை. இவர் தனது ஆட்டத்தை இயல்பாக ஆடுகிறார். ரசிகர்கள் ஏளனப் படுத்திய போது அவர் சற்று கலங்கிய மனதுடன் நின்று கொண்டிருந்தார். இதனை காணும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரது இடத்தில் இருந்தால் எனக்கும் அந்த நிலைமைதான் என எனக்கு அப்போதுதான் புரிந்தது. இதற்காக நான் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனை நான் பொறுத்துக் கொள்கிறேன். இதற்கு மேலும் அவர் ஏளனப்படுத்தப் படுவதை நான் விரும்பவில்லை".
விராட் கோலி இந்திய ரசிகர்களின் செயலுக்காக ஸ்மித்திடம் மன்னிப்பு கோரினார்.
"இந்திய ரசிகர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வை சில உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலே சில போட்டிகளில் கண்டேன். இது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்."
அடுத்தது என்ன?
இந்திய கேப்டனின் மனம் கவர்ந்த சைகை உலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விராட் கோலி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். ஸ்டிவன் ஸ்மித் தவறு செய்தார், அதற்கான தண்டனையையும் அனுபவித்து விட்டார். சிலர் அவரது கடந்தகால குற்றங்களை மனதில் வைத்து மீண்டும் மீண்டும் அவரது மனது புன்படும் வகையில் பேசி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஸ்டிவன் ஸ்மித் தடையிலிருந்து திரும்பியது முதல் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதனை எதிர்வரும் காலங்களிலும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.