உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ளது. ஒவ்வொரு நிமிடங்களும் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு கொண்டே உள்ளது. புதிதாக கிடைத்த உற்சாகமான செய்தி என்னவென்றால், கட்டை விரலில் காயம் ஏற்பட்ட விராட் கோலி குணமடைந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களமிறங்க தயராகி விட்டார்.
இந்தியாவின் முதல் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என பல்வேறு தகவல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. கடந்த சனிக்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகத்தின் அரவனைப்பு மற்றும் ரசிகர்களின் வேண்டுதளினால் விராட் கோலி தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
இந்திய அணியில் மட்டும் இந்த காயப் பிரச்சினை இல்லை. உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளில் உள்ள சில வீரர்களும் காயம் அடைந்துள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியில் மோத உள்ள தென்னாப்பிரிக்க அணியிலும் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஹாசிம் அம்லா, லுங்கி நிகிடி, டேல் ஸ்டெய்ன் போன்ற சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் வீரர்களும் காயத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா பங்கேற்ற போது ஹாசிம் அம்லாவிற்கு காயம் ஏற்பட்டது. ஜோஃப்ரா ஆர்சர் வீசிய வேகத்தில் பந்து நேரடியாக அம்லாவின் தலைக்கவசத்தை தாக்கியது. பின்னர் உடனே களத்திலிருந்து வெளியேறி கடைசி சில ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்தார். இருப்பினும் ஜீன் 2 அன்று நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அம்லா ஆடும் XI-ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாசிம் அம்லாவை களமிறக்க தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை. "இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், தலைக்கவசம் இருந்ததனால் மட்டுமே அவருக்கு அடி சற்று குறைவாக பட்டது" என தென்னாப்பிரிக்க அணி மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார்.
"அம்லா ஓய்வறைக்கு வரும் போது மிகவும் வலி உணர்வதைப் போல் மிகவும் சோர்ந்து வந்தார். ஃபிட்னஸ் தேர்வு அம்லாவிற்கு இருமுறை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட அம்லா அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இறுதி முடிவு போட்டி நாளன்று தெரிவிக்கப்படும்" இருப்பினும் ஹாசிம் அம்லா இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே குணமடைந்து விடுவார் என மருத்துவர் முஸாஜி தெரிவித்துள்ளார்.
ஃபிட்னஸ் தேர்வு தொடர்ந்து அம்லாவிற்கு நடத்தப்பட்டது. அவர் ஃபிட்னஸ் தேர்வை திறமையாக எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் ஆடும் XI-ல் அம்லா இடம்பெறவது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இவரிடமிருந்து சில அறிகுறிகள் தென்பட்டன. அதனால் தான் இரண்டாவது போட்டியில் இவர் இடம்பெறவில்லை. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அம்லா வெளிபடுத்துவதற்காக அவருக்கு ஓய்வளிக்கப்ட்டுள்ளது என மற்றொரு காரணத்தையும் கூறலாம். என தென்னாப்பிரிக்க மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் லுங்கி நிகிடிக்கு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் 4 ஓவர்கள் மட்டுமே இந்த போட்டியில் வீசி பின்னர் ஓய்வறைக்கு சென்றார்.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் லுங்கி நிகிடி பங்கேற்க மாட்டார் என மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார். லுங்கி நிகிடியை நாங்கள் ஆராய்ந்து கண்காணித்ததில் அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் லுங்கி நிகிடியை நீண்ட நேரம் விளையாட வைக்க விரும்பவில்லை. எனவே அவர் தற்போது கிட்டத்தட்ட 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். நாளை அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க உள்ளோம். லுங்கி நிகிடி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.
இவ்வளவு இழப்பு இருந்தாலும் மொசாஜ் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். டேல் ஸ்டெய்ன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களம் காண அதிக வாய்ப்புள்ளது. ஸ்டெய்னை இந்தியா அல்லது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் நன்கு குணமடைந்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான போட்டி தொடங்கும் முன்பாக டேல் ஸ்டெய்னை களம் இறக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
லுங்கி நிகிடியை தவிர இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு சிறப்பான ஃபிட்னஸ் செய்தி வெளியாகியுள்ளது. இரு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளனர். வலிமையான இரு அணிகள் மோத இருப்பதால் இந்தப் போட்டியில் ஆரவாரத்திற்கு சிறிதும் பஞ்சமிருக்காது.