உலகக்கோப்பை 2019 : 2008 அண்டர்-19 உலகக்கோப்பையில் கோலிக்கு எதிராக விளையாடிய 6 முக்கிய வீரர்கள்

அண்டர் 19 வீரர்கள்- விராத் கோலி, வில்லியம்சன், ஸ்மித்
அண்டர் 19 வீரர்கள்- விராத் கோலி, வில்லியம்சன், ஸ்மித்

கிரிக்கெட் உலகில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மிகப்பெரிய தளமாக அண்டர்-19 கிரிக்கெட் போட்டிகள் இருந்து வருகிறது. இந்திய அண்டர்-19 அணியிலிருந்து விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், விராத் கோலி, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் மற்றும் சில வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வந்தனர்.

2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விராத் கோலி வழிநடத்தி கோப்பையை வெல்ல உதவினார். நவீன கால கிரிக்கெட் உலகில் கோலி மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்தியா அணியில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் ஒரு சில சிறந்த வீரர்கள் அண்டர்-19 அணியிலிருந்து தேசிய அணிக்கு விளையாடி வந்தனர்.

2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் விராத் கோலிக்கு எதிராக வேறு அணிகளில் ஒரு சில வீரர்கள் விளையாடினர். தற்போது அவர்கள் 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலும் விராத் கோலி தலைமையில் விளையாடும் இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ளனர்.

# 6 ட்ரன்ட் போல்ட்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்

2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பையில் இடம்பெற்ற மூன்று நியூசிலாந்து நட்சத்திர வீரர்களில் ட்ரன்ட் போல்டும் ஒருவர். நியூஸிலாந்து அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான போல்ட் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்டர்-19 அணியில் சிறப்பாக விளையாடிய போல்ட் 2009-ஆம் ஆண்டு 19 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பயிற்சி ஆட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரில் 2011-ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றார். அந்த போட்டியில் போல்ட் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளையாடிய போல்ட் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். 2012-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சர்வதேச அணியில் இடம்பெற்றார்.

2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணிக்கு வரவிருக்கும் உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார். இதுவரை 61 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் 246, 147 மற்றும் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

# 5 திசரா பெரேரா

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான அண்டர்-19 முத்தரப்பு தொடரில் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். 2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 56 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

உலகக்கோப்பை 2015 இங்கிலாந்து மற்றும் இலங்கை இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொட இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்ர்
உலகக்கோப்பை 2015 இங்கிலாந்து மற்றும் இலங்கை இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொட இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்ர்

றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு ஒரு கூடுதல் பலம் சேர்க்கும் வீரராக இருப்பார். பெரேரா இதுவரை 6 டெஸ்ட், 151 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் 203, 2133 மற்றும் 1120 ரன்கள் மற்றும் 11, 168, மற்றும் 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.# 4 கிறிஸ் வோக்ஸ்

2008-ஆம் ஆண்டு அண்டர

்-19 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்தார் வோக்ஸ். அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் சில போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 2009-ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் அணியில் வோக்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜனவரி 2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிட்னியில் அதே சுற்றுப்பயணத்தில் சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். 2013-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இதுவரை 26 டெஸ்ட், 83 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் 1012, 1039 மற்றும் 91 ரன்கள் மற்றும் 72, 116, 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர்

# 3 டிம் சவுதி

2006 மற்றும் 2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியில் சவுதி சிறந்த வீரராக விளையாடினார். 2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

2008-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஐந்து விக்கெட்டுகள் மற்றும் 77 ரன்கள் எடுத்தார். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 18 விக்கெட்டுகள், சராசரி 17.33. வரும் உலகக்கோப்பை தொடரிலும் மீண்டும் சாதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 65 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 57 டி20 போட்டிகளில் 2500 ரன்களுக்கு மேல், 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 3 வது டி20
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 3 வது டி20

# 2 ஸ்டீவ் ஸ்மித்

தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு லெக் ஸ்பின்னராக தொடங்கிய ஸ்மித் இன்று உலகில் சிறந்த பேட்ஸ்மேன்னாக வலம் வந்துகொண்டுள்ளார். 2008-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் விளையாடினார். 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு லெக் ஸ்பின்னராக சர்வதேச அணியில் அறிமுகமானார். 2010-11-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின்னர் விலகி விட்டார் .

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

2013-ஆம் ஆண்டு ஸ்மித் 2.0 என்ற அளவில் சிறப்பான கம்பேக் கொடுத்தார். டெஸ்ட் தரவரிசையில் உச்சநிலையை அடைவதற்காக அவர் 2014-15-ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடினார். 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு அனைத்து வடிவ போட்டிகளிலும் கேப்டனாக இருந்தார். பந்தை சேதப்படுத்தியது காரணமாக ஸ்மித் விளையாடுவதற்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 64 டெஸ்ட், 108 ஒருநாள் மற்றும் 30 டி20 போட்டிகளில் 6199, 3431 மற்றும் 431 ரன்கள், சராசரி 61.38, 41.84 மற்றும் 21.55. ஸ்மித் 2 இரட்டை சதங்கள், 31 சதங்கள் மற்றும் 45 அரை சதங்கள் அடித்துள்ளார்.

# 1 கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மார்ட்டின் க்ரோவ்க்கு அடுத்த படியாக கேன் வில்லியம்சன் இருந்து வருகிறார். 17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2008-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அண்டர்-19 அணியின் கேப்டனாக இருந்தார். 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் கேன் அறிமுகமானார். அதே ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

2016-ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவ போட்டிகளிலும் கேப்டனாக நியூசிலாந்து அணியை முன்னெடுத்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

இதுவரை கேன் 72 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 57 டி20 போட்டிகளில் 6139, 5555 மற்றும் 1505 ரன்கள், சராசரி 53.38, 45.91 மற்றும் 31.35. வில்லியம்சன் இரண்டு இரட்டை சதங்கள், 31 சதங்கள் மற்றும் 76 அரை சதங்கள் அடித்துள்ளார்.

எழுத்து-பிரசாத் மாண்டதி

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்

App download animated image Get the free App now