நடந்தது என்ன?
இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரோகித் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சதத்தை மதிப்பிட்டு "ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த ஓடிஐ இன்னிங்ஸ் இதுவாகும்" என தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் சதம் இந்திய அணி முதல் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது.
உங்களுக்கு தெரியுமா...
ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் யுஜ்வேந்திர சகாலின் சிறப்பான பந்துவீச்சினால் தென்னாப்பிரிக்க அணி 227 என்ற சுமாரண ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. சேஸிங்கில் பார்க்கும் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சில் தடுமாறி வந்தனர். ஆரம்பத்திலே ஷீகார் தவான் மற்றும் விராட் கோலி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இருப்பினும் ரோகித் சர்மா சூழ்நிலையினை புரிந்து கொண்டு மிகவும் பொறுமையான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 23வது சர்வதேச ஒருநாள் சதத்தினை விளாசினார். அத்துடன் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் செய்தார்.
கதைக்கரு
இந்த போட்டியின் முடிவில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ரோகித் சர்மாவின் சிறந்த ஓடிஐ இன்னிங்ஸ் இதுவாகும் என தெரிவித்தார். மேலும் சாதுரியமாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சை கையாண்டு தனது முழு அனுபவத்தையும் இந்தப் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா என விராட் கோலி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"என்னுடைய ஒப்பிட்டின்படி ரோகித் சர்மாவின் அனைத்து சிறப்பான இன்னிங்க்ஸ்களையும் நான் நேராக பார்த்துள்ளேன். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டமே இவரது சிறந்த இன்னிங்ஸாக நான் நினைக்கிறேன். ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு பேட்டிங்கை கையாளுவது என அறிந்து நன்றாக பேட்டிங்கை ரோகித் சர்மா வெளிபடுத்தியுள்ளார். இவரது விருப்பப்படி சிறப்பான ஆட்டத்தை அவர் போக்கில் விளையாடி சதம் அடித்தார். ஆட்டத்தை சரியாக கட்டுபடுத்தி தன்வசம் எடுத்து சென்றுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்களும் இவருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில சில பார்ட்னர் ஷீப்களினால் இந்திய அணியால் 228 என்ற இலக்கை அடைய முடிந்தது.
மேலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா எதிரணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை தடுத்து நிறுத்தி தன்னை முழுவதுமாக இந்த போட்டியில் ஈடுபடுத்தி கொண்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தனது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடினார். தென்னாப்பிரிக்க அதிரடி பௌலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு தனது விக்கெட்டை எதிரணிக்கு விட்டு தராமல் விளையாடினார். என்னுடைய கருத்துப்படி ரோகித் சர்மாவின் சிறப்பான இன்னிங்ஸ் இதுதான்.
அடுத்தது என்ன?
ரோகித் சர்மா ஒரு சரியான ஆட்டத்திறனின்றி தான் உலகக்கோப்பை தொடருக்கு வந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா விளாசிய சதம் மூலம் உலகக் கோப்பையில் இந்தியாவின் முண்ணனி பேட்ஸ்மேனாக இவர் வலம் வருவார் என தெரிகிறது. இந்திய அணி தனது இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஜீன் 9 அன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளது.