நடந்தது என்ன?
இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தக்க சமயத்தில் வீரர்களை வசைபாடுவார். ஜாஸ்பிரிட் பூம்ரா பற்றிய விரேந்தர் சேவாக்-கின் சமீபத்திய டிவிட் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலிற்கு உள்ளாகியுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
12வது ஐபிஎல் தொடர் மே 12 அன்று முடிவுக்கு வந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லிங்காக சென்று கொண்டிருந்தது. பூம்ரா வீசிய 19வது ஓவரில் ஒரு முக்கியமான கேட்சினை விக்கெட் கீப்பர் குவின்டன் டிகாக் தவறவிட்டார். பௌலர் இதற்கு வருத்தப்படவில்லை. மாறாக ஓவர் முடிவில் விக்கெட் கீப்பரிடம் சென்று ஊக்கமளிக்கும் வகையில் அவரிடம் சிரிப்பை வெளிபடுத்தி கைதட்டினார். இந்த புகைப்படம் ஜாஸ்பிரிட் பூம்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிக வைரலுக்கு உள்ளாக்கினர்.
கதைக்கரு
இந்திய அணி இன்று(ஜீன் 5) தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பான தொடக்க பந்துவீச்சை மேற்கொண்டனர். குறிப்பாக ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்துவீச்சு தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களை நீண்ட நேரம் களத்தில் தங்க விடவில்லை. பூம்ரா வீசிய பந்துகளை டிகாக்கினால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அனைத்தும் பேட்டின் விளிம்பிற்கு மேற்பகுதியிலே சென்றது. தடுமாறி வந்த டிகாக் பூம்ரா வீசிய 3வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். டிகாக் 17 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்களை மட்டுமே அடித்தார்.
விரேந்தர் சேவாக், ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்துவீச்சை பாராட்டினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் பூம்ராவின் அணுகுமுறைக்கும், உலகக் கோப்பையில் பூம்ராவின் அணுகுமுறையையும் வேறுபடுத்தி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ஜாஸ்பிரிட் பூம்ரா தனது பந்துவீச்சில் டிகாக், விக்கெட்டை தவறவிடும் போது சாதரணமாக எடுத்துக் கொண்டு எவ்வித கோபதாபங்களையும் வெளிபடுத்தாமல் பொறுமையுடன் சிரிப்பை வெளிபடுத்தினார். ஆனால் இன்று தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனிற்கு எவ்வித கருனையையும் பூம்ரா காட்டவில்லை என தனது டிவிட்டில் கூறியுள்ளார்.
அடுத்தது என்ன?
இந்திய அணி அதிரடியாக பந்துவீச்சை மேற்கொண்டு தென்னாப்பிரிக்காவை 50 ஓவர்களில் 227 ரன்களில் சுருட்டியது. ஜாஸ்பிரிட் பூம்ரா, புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், யுஜ்வேந்திர சகால் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த கட்டுரை பதிவேற்றப்படும் போது இந்திய அணி தவான் விக்கெட்டை இழந்து 10 ஓவர்களுக்கு 34 ரன்கள் அடித்திருந்தது. காகிஸோ ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அதிரிடி வேகத்தில் பந்துவீச்சை மேற்கொண்டு வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.