கடந்த ஒரு வாரமாக இங்கிலாந்தில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2019 உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகள் ரத்தானது. அத்துடன் இங்கிலாந்தின் பல்வேறு இடங்களில் அதிக ஈரப்பதத்துடன் ஆடுகளங்கள் காணப்படும்கிறது. 2019 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்ற முடிவை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளுக்கு மாற்று நாள் ஒன்றை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் ஐசிசி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே மாற்று நாட்களை அறிவித்துள்ளது. அத்துடன் மழைப்பொழியும் போது மைதானத்தின் அனைத்து பக்கங்களையும் பாலீதீன் கவரால் மூடாமல் பேட்டிங் செய்யும் இடத்தை மட்டும் மூடுகின்றனர். இது ரசிகர்களின் கோபத்தை மென்மேலும் அதிகரிக்கிறது.
வரும் நாட்களில் நடைபெற உள்ள போட்டிகளில் அதிக மழைப்பொழிய வாய்ப்புள்ளது. நாம் இங்கு உலகக் கோப்பை தொடரின் அடுத்த 5 போட்டிகளின் காலநிலை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி காண்போம்.
#1 ஆஸ்திரேலியா vs இலங்கை, லண்டன் (ஓவல்), ஜீன் 15
இலங்கை அணியின் இரு போட்டிகள் ஏற்கனவே மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜீன் 15 சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் போட்டி மழையினால் பாதிப்படைய வாய்ப்பில்லாத போன்ற கால சூழ்நிலை நிலவி வருகிறது. லண்டனில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை தற்போது சில நாட்களாக மேக மூட்டத்துடன் காட்சியளித்து சூரிய வெளிச்சம் பரவி வருகிறது. சிறு சாரல் மழை பொழிய சிறிது வாய்ப்புள்ளது. ஆனால் இதுவும் போட்டி முடிவடைந்த நாட்களுக்கு பிறகே பொழிய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
#2 ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா, கர்டிஃப் (சோபியா கார்டன்), ஜீன் 15
மழையினால் ஒரு போட்டிகள் கூட பாதிக்கப்படாத மைதானங்களுள் ஒன்று கர்டிஃப். இதுவரை இங்கு நடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் தீர்வுகள் கிடைத்துள்ளன. 2019 உலகக் கோப்பையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தென்னாப்பிரிக்காவிற்கும் ஒரு போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளில் மழைப்பொழிவு காணப்படும். இருப்பினும் போட்டி நாளன்று மழை பொழிய வாய்ப்பில்லை. எனவே இப்போட்டியில் தக்க தீர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
#3 இந்தியா vs பாகிஸ்தான், மான்செஸ்டர் (ஓல்ட் டஃபோர்ட்), ஜீன் 16
இவ்வருட உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் மோத உள்ளது. ஏற்கனவே டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதவிருந்த போட்டி மழையினால் ரத்தானது. பாகிஸ்தான் அணி இரு தோல்விகள் மற்றும் ஒரு போட்டி மழையினால் ரத்தாகி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மான்ஸ்டரில் கடுமையான மழைப் பொழிவு நிகழ்ந்து வருகிறது. இருப்பினும் இன்று (ஜீன்15) சூரியன் உதிக்க அதிக வாய்ப்புள்ளது. போட்டி நாளன்று மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். நண்பகலிற்கு மேல் சிறு சாரல் மழை பொழிய வாய்ப்புள்ளது. போட்டி நாளன்று முழுவதும் மேகமூட்டத்துடன் வானிலை தென்படும் எனவும், போட்டியன்று மழைபொழிய வாய்ப்புள்ளதாக "அக்குவெதர்" கணித்துள்ளது.
#4 வங்கதேசம் vs மேற்கிந்தியத் தீவுகள், டான்டன் (கூப்பர் அசோசியேட் மைதானம்), ஜீன் 17
இரு அணிகளுமே மழையினால் ஒரு போட்டிகளை இழந்துள்ளது. அத்துடன் உலகக் கோப்பை தொடரை அதிரடியாக ஆரமித்து தற்போது மோசமான நிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை பொழிய வாய்ப்பில்லை. இப்போட்டிக்கு அடுத்த நாளன்று மேகமூட்டத்துடன் வானிலை தென்படும், ஆனால் மழைபொழிய வாய்ப்பில்லை.
#5 ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து, மான்ஸ்டர் (ஓல்ட் டஃபோர்ட்), ஜீன் 18
உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றான இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி மழையினால் பாதிக்க வாய்ப்பில்லை. பிசிசி கணிப்புப்படி ஜீன் 18 அன்று மிகவும் அதிக சூரிய ஒளி வெளிபட வாய்ப்புள்ளதாகவும், போட்டிக்கு அடுத்த நாள் மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.