ஐசிசி 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை உலகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மழை கிரிக்கெட் அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் தலைமை கிரிக்கெட் நிர்வாகம் 3வது வாரத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இதனை சரி செய்துள்ளது.
மூன்றாவது வார இறுதியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை புள்ளி பட்டியலில் வகிக்கின்றன. 5வது இடத்தில் இலங்கை உள்ளது. உலகக்கோப்பை அணிகள் அனைத்தும் முதல் 4 இடங்களை பிடிக்க முட்டி மோதிக் கொட்டுள்ளன. இதனால் இறுதியாக புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதியில் பங்கேற்கும் அந்த 4 அணிகள் யார் என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
கடந்த வாரங்களில் களத்தில் நிறைய நிகழ்வுகள் அரங்கேறின. நாம் இங்கு 3வது உலகக்கோப்பை தொடரில் நடந்த முக்கிய 3 தருணங்களை பற்றி காண்போம்.
#3 மேக்ஸ்வெல்-லின் சிறப்பான ரன்-அவுட், பாகிஸ்தானின் இன்னிங்ஸை திசை திருப்பியது
2019 உலகக்கோப்பை தொடரில் 17வது போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தேர்வு செய்து பெரும் தவறை ஆரம்பத்திலே அரங்கேற்றியது. இதன் விளைவாக ஆஸ்திரேலியா 307 ரன்களை இலக்காக பாகிஸ்தானிற்கு நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங்கில் சிறப்பாக அசத்தி இலக்கிற்கு அருகில் சென்றது.
1 விக்கெட் மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. 46வது ஓவரை கானே ரிச்சர்ட்சன் வீச வந்தார். ஷாஹீன் அஃப்ரிடி அந்த ஒவரின் முதல் 3 பந்துகளை தடுத்து நிறுத்தி ஆடினார். மறுபக்கத்தில் சஃப்ரஸ் அகமது இருந்தார்.
4வது பந்தில் அஃப்ரிடி கவர் திசையில் பந்தை விளாச முற்பட்ட போது அதனை மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். மேக்ஸ்வெல் தனது சிறப்பான ஃபீல்டிங் திறனை அந்த இடத்தில் வெளிக்கொண்டு வந்து நான்-ஸ்ட்ரைக்கர் முனை நோக்கி பந்தை வீசி எறிந்தார். அப்போது சஃப்ரஸ் அகமது கிரிஸிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
ஒரேயொரு விக்கெட் இருந்த நிலையில், மேக்ஸ்வெல்லின் அற்புதமான ஃபீல்டிங்கால் அந்த விக்கெட்டும் இழந்து பாகிஸ்தான் சவாலை தடுத்து நிறுத்தியது ஆஸ்திரேலிய அணி.
#2 பாபர் அஜாமை முழுவதுமாக சிதறவிட்ட குல்தீப் யாதவ்
உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக வெற்றி பெறுவது இந்திய அணியின் அடையாளமாகும். தற்போது உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது ஒரு வழக்கமான செயலாக மாறி உள்ளது. உலகின் தலைசிறந்த கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 7 போட்டிகளில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை.
336 என்ற ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் சிறப்பான தொடக்கத்தை ஆரம்பத்தில் வெளிபடுத்தியது. அந்த அணி இரண்டாவது விக்கெட்டிற்கு பாபர் அஜாம் மற்றும் ஃபக்கர் ஜமானால் சிறப்பான பார்டனர் ஷீப் செய்து விளையாடி வந்தது. அந்த சமயத்தில் பார்க்கும் போது பாகிஸ்தான் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை அடைந்து விடும் என்பது போல் தான் விளையாடிக் கொண்டிருந்தது.
ஆனால் குல்தீப் யாதவ் தனது ரிஸ்ட் ஸ்பின் மூலம் அந்த போக்கை முழுவதுமாக மாற்றி பாகிஸ்தானின் நிலையான பார்டனர் ஷீப்பை முறித்தார்.
குல்தீப்பின் சுழலில் பாபர் அஜாம் தடுமாறி வந்தார். இதனை சரியாக பயன்படுத்தி பந்தை வீசிய குல்தீப் சாதுரியமாக போல்ட் ஆக்கி ஆட்டத்தின் போக்கை இந்தியா வசம் மாற்றியமைத்தார். இது இந்திய அணிக்கு சாதகமாக ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஃபக்கர் ஜமான் விக்கெட்டையும் வீழ்த்தி முழு ஆட்டத்தையும் இந்தியா வசம் மாற்றினார் குல்தீப் யாதவ்.
#1 விஜய் சங்கரின் முதல் உலகக்கோப்பை விக்கெட்டிற்கு விராட் கோலியின் எதிர்வினை
உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக இருந்து வருகிறது. அதன்படி இதுவரை பாகிஸ்தானுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் வென்று 100 சதவீத வெற்றியை தன்வசம் வைத்துள்ளது இந்தியா. இந்திய அணிக்கு இப்போட்டியில் அதிக நன்மைகள் கிடைத்துள்ளன. புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே இந்திய அணிக்கு இப்போட்டியில் ஏற்பட்ட பெரும் இழப்பு. ஆட்டத்தின் 5வது ஓவரை இவர் வீசிக் கொண்டிருந்த போது பந்தை எடுக்க ஓடினார். அப்போது லேசான காயத்தை ஏற்படுத்தி கொண்டார். இது இந்திய அணிக்கு சிறிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வேகப்பந்து வீச்சாளர் 4 பந்துவீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி, இளம் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளித்தார்.
விராட் கோலி, விஜய் சங்கரிடம் இந்த ஒவரின் கடைசி இரு பந்தை வீசுமாறு பணித்தார். தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் விஜய் சங்கர். அத்துடன் இது விஜய் சங்கரின் முதல் உலகக் போட்டியின் முதல் பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் வீரருக்கு உலகக்கோப்பை கனவு அருமையாகவே நனவானது. அதுவும் இவர் வீழ்த்திய விக்கெட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இமாம்-உல்-ஹக் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் என்பதை நாம் மறந்திடக் கூடாது.
விராட் கோலி உடனே தனது பெரும் மகிழ்ச்சியை களத்தில் வெளிபடுத்தி அசத்தினார்.