#1 விஜய் சங்கரின் முதல் உலகக்கோப்பை விக்கெட்டிற்கு விராட் கோலியின் எதிர்வினை
உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இந்திய அணிக்கு மிகவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக இருந்து வருகிறது. அதன்படி இதுவரை பாகிஸ்தானுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் வென்று 100 சதவீத வெற்றியை தன்வசம் வைத்துள்ளது இந்தியா. இந்திய அணிக்கு இப்போட்டியில் அதிக நன்மைகள் கிடைத்துள்ளன. புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே இந்திய அணிக்கு இப்போட்டியில் ஏற்பட்ட பெரும் இழப்பு. ஆட்டத்தின் 5வது ஓவரை இவர் வீசிக் கொண்டிருந்த போது பந்தை எடுக்க ஓடினார். அப்போது லேசான காயத்தை ஏற்படுத்தி கொண்டார். இது இந்திய அணிக்கு சிறிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வேகப்பந்து வீச்சாளர் 4 பந்துவீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி, இளம் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளித்தார்.
விராட் கோலி, விஜய் சங்கரிடம் இந்த ஒவரின் கடைசி இரு பந்தை வீசுமாறு பணித்தார். தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் விஜய் சங்கர். அத்துடன் இது விஜய் சங்கரின் முதல் உலகக் போட்டியின் முதல் பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் வீரருக்கு உலகக்கோப்பை கனவு அருமையாகவே நனவானது. அதுவும் இவர் வீழ்த்திய விக்கெட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இமாம்-உல்-ஹக் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் என்பதை நாம் மறந்திடக் கூடாது.
விராட் கோலி உடனே தனது பெரும் மகிழ்ச்சியை களத்தில் வெளிபடுத்தி அசத்தினார்.