கடந்த ஞாயிறு அன்று நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷீகார் தவான் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வாரங்களுக்கு உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பேட் கமின்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை தவான் எதிர்கொண்ட போது பந்து அவரது கட்டை விரலை தாக்கியது.
தவானின் விலகல் இந்திய பேட்டிங் லைன்-அப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய இழப்பாகும். இங்கிலாந்தில் நடந்த ஐசிசி தொடர்களில் தவானின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருந்து வந்துள்ளது.
எனவே உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் அடுத்த போட்டியில் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஏதேனும் ஒருவர் இடம்பெற வாய்ப்புள்ளது.
தவான் விலகலின் காரணமாக மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார். இதனால் நம்பர் 4 பேட்ஸ்மேனிற்கு ஆள் தேவை. இந்திய அணி நிர்வாகத்திற்கு மீண்டும் இந்த தலைவலி ஏற்பட்டுள்ளது.
நம்பர் 4 பேட்டிங்கிற்காகவே இந்திய உலகக் கோஇடம்பெறாதணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் விஜய் சங்கர். இவர் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து மண்ணிலேயே நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இவருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். வெல்லிங்டனில் நடந்த ஒருநாள் போட்டியில் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்களை குவித்து 18வது வீரராக நம்பர் 4 பேட்டிங்கிற்கு தேர்வானார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய மண்ணில் விஜய் மிடில் ஆர்டரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46, 32 மற்றும் 26 ஆகிய ரன்களை குவித்தார். இவரது குறைவான கிரிக்கெட் வாழ்வில் 5 போட்டிகளில் பங்கேற்று 33 சராசரி மற்றும் 96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 165 ரன்களை குவித்தார்.
விஜய் சங்கர் ஒரு வழக்கமான பௌலர் கிடையாது, இருப்பினும் இவர் ஒரு பகுதிநேர சிறப்பான பந்துவீச்சாளர். 4 அல்லது 5 ஓவர்களை சிறப்பாக வீசி கட்டுபடுத்தும் திறமை உடையவர். இங்கிலாந்தில் அடுத்த சில நாட்களுக்கு மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும். எனவே இந்த மேகமூட்ட வானிலையில் விஜய் சங்கர் இந்திய அணியின் 4வது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கி ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.
தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாமல் விஜய் சங்கரை இந்திய அணியில் சேர்க்கப்பட்டால் குல்தீப் யாதவிற்கு பதிலாக முகமது ஷமி இடம்பெற வாய்ப்புண்டு. மறுமுனையில் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கூட இடம்பெறலாம். ஏனெனில் ஜடேஜா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் இவர் அசத்துவார் என்பதால் இந்திய நிர்வாகம் இம்முடிவை எடுக்க வாய்ப்புண்டு. தவான் இடம்பெறாத காரணத்தால் ஜடேஜா மற்றொரு பேட்ஸ்மேனாக இருப்பார்.
சமீப காலமாக நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் டிரென்ட் போல்ட் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதன் காரணமாக, விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பெறச் செய்தால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்டிங் சற்று வலுபெற வாய்ப்புண்டு.
தவானிற்கு பதிலாக தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டால், அவர் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பில்லை. அவரை நம்பர் 6 பேட்டிங்கில் களமிறக்கப்பட்டால் தற்போது உள்ள அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறும்.
தினேஷ் கார்த்திக்கிற்கு தன்னை நிருபிக்க சமீப காலங்களில் சில வாய்ப்புகளே அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பிலும் அவர் ஒரு சிறப்பான இன்னிங்ஸை வெளிபடுத்தவில்லை. இவர் விளையாடிய கடைசி 20 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் அதிரடியாக இருக்கும். ஆனால் ஒரு பெரிய இன்னிங்ஸை இவர் இதுவரை வெளிபடுத்தியது இல்லை.