இந்திய அணியின் முன்னாள் வீரரும் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தவருமான யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் ஒரு சுவாரசியமான கதையை கூறியுள்ளார். அது என்னவென்றால், ரோஹித் சர்மா இம்முறை உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்வார் என கணித்துள்ளார், யுவராஜ் சிங். கடந்த மாதம் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்தார், யுவராஜ் சிங். மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற இருந்த போதிலும் ரோகித் சர்மா மிகப் பெரிய ஸ்கோரை குவிக்க தடுமாறினார். இருப்பினும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இரு சதங்கள் ஒரு அரைசதம் உட்பட மூன்று இன்னிங்சிலும் தமது ரன் வேட்டையை அமர்க்களப்படுத்தி உள்ளார், ரோகித் சர்மா.
ரோஹித் சர்மா பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார், யுவராஜ் சிங். முன்னாள் ஜாம்பவானான யுவராஜ் சிங், இந்த தொகுப்பிற்கு "சிறந்த தொடக்கத்தைக் கண்டால் போதும் பெரியதொரு ஸ்கோர்களை குவிக்க தேவையில்லை" என்று தலைப்பு வைத்துள்ளார். மேலும், இது போன்ற நல்ல விஷயங்களை நோக்கி அடியெடுத்துச் செல்லும் ரோகித் சர்மா எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார், யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங்கிடம் கூறியதை பற்றியும் விளக்கியுள்ளார், பஞ்சாபை சேர்ந்த யுவராஜ் சிங். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அதேபோல், வரலாறு மீண்டும் தொடர இம்முறை நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய வீரரான ரோகித் சர்மா இதே சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கிறார், யுவராஜ் சிங்.
"ஐபிஎல் நடைபெற்ற காலங்களில் ரோஹித் சர்மாவிடம் பேசினேன் பெரிய ரன்களை குவிப்பது பற்றி இல்லாமல் சிறந்த தொடக்கத்தை காண வேண்டியவை பற்றி விவாதித்தோம். நானும் உன்னை போல தான் உன்னைச் சுற்றி என்னென்ன அமைந்திருக்கின்றன என்பதை பற்றி எனக்கு தெரியாது. 2011 உலக கோப்பை தொடருக்கு முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் என்னிடம் கூறிய வார்த்தைகளை தான் நான் உன்னிடம் கூறுகின்றேன். நிச்சயம் 2019 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வெல்வார் என கணித்து உள்ளேன்"
என தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் எழுதியுள்ளார்.
2019 உலக கோப்பை தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், அந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் ரோகித் சர்மா அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கண்டார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட 140 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். ரோஹித் சர்மாவின் இந்த தொடர்ச்சியான பங்களிப்பால் இந்திய ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற ரன்களை குவித்தால், யுவராஜ்சிங்கின் கணிப்பு வீணாகாமல் தொடரின் முடிவில் நிச்சயம் வெல்லும்.