மழையானது மண் வாசனையை கிளப்பி மனித ஆத்மாவை புத்துணர்ச்சி அளித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மழையானது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும், குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விளையாடுவர், கால்பந்து வீரர்கள் தங்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்யும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள், சிலர் தங்களது பிடித்தமான நாவலை ஜன்னலிற்கு அருகே அமர்ந்து மழைபெய்கையில் விரும்பி படிப்பர். மழை பெய்யும் போது சாகச மழை ஏறுபவர்கள் இயற்கையின் ஒரு புது வடிவத்தை காண்பார்கள். சிலர் தங்களுக்கு பிடித்தமான உணவை மழை பெய்யும் போது விரும்பி அருந்துவார்கள்.
ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் மழை பெய்யும் போது மிகவும் வருந்துவார்கள். இவ்வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 உலகக்கோப்பை தொடரில் ஜீன் 18 வரை நடந்த போட்டிகளில் 4 போட்டிகள் மழையினால் தடையானது.
சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், செய்தித்தாள்களில் உலகக்கோப்பையில் எது சிறந்த அணி, பேட்ஸ்மேன், பௌலர் என்று விவாதம் நடத்தி வருகிறது. அத்துடன் உலகக்கோப்பை தொடரின் அதிரடி வீரர்கள் ஆர்ச்சர், பாண்டியா, வோக்ஸ், அலெக்ஸ் கேரே, ரஸல் ஆகியவற்றில் யார் என்றும் பெரும் விவாதம் போய் கொண்டுள்ள நிலையில் "மழை" தான் சிறந்த ஆட்டத்திறனை உலகக்கோப்பையில் வெளிபடுத்தியுள்ளது என நிறுபித்துள்ளது. ஏற்கனவே 1992 மற்றும் 2003 உலகக்கோப்பை தொடர்களின் போக்கை மழை மாற்றியுள்ளது.
நாம் இங்கு மழையினால் ஆட்டத்தின் போக்கு மாறிய 5 உலகக்கோப்பை போட்டிகளை பற்றி காண்போம்.
#1 இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, 1992, சிட்னி, அரையிறுதி
இங்கிலாந்து 252/6 (45), தென்னாப்பிரிக்கா 232/6 (43)
இங்கிலாந்து 20 ரன்களில் மழைவிதிப்படி வெற்றி பெற்றது
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மழையினால் பாதித்து பெரும் ஏமாற்றமடைந்த போட்டி என்றால் அது 1992 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய போட்டி தான். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 13 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. தென்னாப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நோக்கில் இருந்தது. ஆனால் மழை 12 நிமிடங்கள் குறுக்கிட்ட காரணத்தால் தென் ஆப்ரிக்க அணி 1 பந்தில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. (புகைப்படத்தில் 22 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது).
இங்கிலாந்து அணி மிகவும் எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
#2 பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 1992, அடிலெய்டு, தகுதிச் சுற்று
பாகிஸ்தான் 74/10 (40.2), இங்கிலாந்து 24/1 (8.0)
ஆட்டம் டிரா ஆனது
1992 உலகக்கோப்பையில் குழு சுற்றில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மழையானது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தானிற்கு அதிக உதவி புரிந்து பாகிஸ்தானை அரையிறுதிக்கு தகுதி பெறச் செய்தது. இதன்மூலம் முன்னாள் சேம்பியனான ஆஸ்திரேலியா அந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 74 ரன்னில் சுருண்டது. அதன்பின் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்து இலக்கை அடையும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்த போது மழையானது முழு வீச்சில் பெய்ய ஆரம்பித்தது. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தோல்வியடைந்து வெளியேறும் தருவாயில் இருந்த பாகிஸ்தான் அதிரிஷ்டவசமாக ஒரு புள்ளி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணி எவ்வாறு அரையிறுதிக்கு 1992ல் தகுதி பெற்றது என்பது அந்த புள்ளிபட்டியலை காணும் போது நமக்கு தெரிகிறது. இங்கு பாகிஸ்தான் பெரும் தோல்வியை தழுவியிருந்தால் ஆஸ்திரேலியா நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும்.
#3 தென்னாப்பிரிக்கா vs இலங்கை, 2003, டர்பன், குழு சுற்று
இலங்கை 268/9 (50), தென்னாப்பிரிக்கா 229/9 (45, இலக்கு 230)
டக் வொர்த் லிவிஸ் விதிப்படி ஆட்டம் டிரா ஆனது
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தொடர்களில் கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் 2003ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் வந்தது. இப்போட்டியில் மழையின் காரணமாக டிரா ஆனாதால் தென்னாப்பிரிக்கா அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
வாழ்வா - சாவா என்ற குழுப்போட்டியில் இலங்கை 269 ரன்களை இலக்காக நிரணயித்தது. இதனை துரத்திய தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வந்தனர். அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 32 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்ட போது மழை சாரல் தொடங்கியது. மார்க் பௌசர் முத்தையா முரளிதரன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாச தென்னாப்பிரிக்க அணியின் ரன்கள் 229 ஆக உயர்ந்தது.
டக் வொர்த் லிவிஸ் படி 229 ரன்கள் வெற்றிக்கான ரன்கள் என ரசிகர்கள் மற்றும் வீரர்கள் நினைத்திருந்தனர். ஏற்கனவே மழை குறுக்கிட்ட காரணத்தால் 230 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மார்க் பௌசர் முரளிதரன் வீசிய கடைசி பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டி விட்டார். ரன் ஏதும் ஓடவில்லை. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட போது மழை கடுமையாக பெய்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா அவ்வருட உலகக்கோப்பை தொடரிலிருந்தும் வெளியேறியது.
#4 பாகிஸ்தான் vs ஜீம்பாப்வே - 2003, புல்வாயோ, குழு சுற்று
பாகிஸ்தான் 73/3 (14.0/38), ஜீம்பாப்வே 0/0 (0.0)
போட்டி "டிரா"
இப்போட்டியில் மழையின் மூலமாக ஆட்டத்தின் முழு போக்கே மாறியது. இப்போட்டியில் குறுக்கிட்ட மழையினால் இரு அணிகளுக்கும் தலா இரு புள்ளிகள் (வெல்லும் அணிக்கு 4 புள்ளிகள்) அளிக்கப்பட்டது.
இப்போட்டிக்கு பிறகு தான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் கணக்கை அதிகம் உற்று நோக்கினர். இந்த உலகக்கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றிருந்தால் 12 புள்ளிகளுடன் ஜீம்பாப்வே, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மூன்றாவது இடத்தில் இருந்திருக்கும். இங்கிலாந்து அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.
#5 மேற்கிந்தியத் தீவுகள் vs வங்கதேசம், 2003, பேனோனி, குழு சுற்று
மேற்கிந்திய தீவுகள் 244/9 (50.0), வங்கதேசம் 32/2 (8.1)
மேட்ச் டிரா
மேற்கிந்திய தீவுகளுக்கு சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டி மிக முக்கியமானதாகும். ஆனால் மழை காரணமாக ஆட்டத்தின் போக்கு மாற்றப்பட்டு கென்யா அரையிறுக்கு தகுதி பெற்றது.
வலிமை வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்றிருந்த வங்கதேசம் மோதிய போட்டியில் கரேபியன் வீரர்கள் கண்டிப்பாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தால் 16 புள்ளிகளுடன் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் 3வது இடத்தை பிடித்துருக்கும். சிறந்த ரன் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.