#3 தென்னாப்பிரிக்கா vs இலங்கை, 2003, டர்பன், குழு சுற்று
இலங்கை 268/9 (50), தென்னாப்பிரிக்கா 229/9 (45, இலக்கு 230)
டக் வொர்த் லிவிஸ் விதிப்படி ஆட்டம் டிரா ஆனது
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தொடர்களில் கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் 2003ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் வந்தது. இப்போட்டியில் மழையின் காரணமாக டிரா ஆனாதால் தென்னாப்பிரிக்கா அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
வாழ்வா - சாவா என்ற குழுப்போட்டியில் இலங்கை 269 ரன்களை இலக்காக நிரணயித்தது. இதனை துரத்திய தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வந்தனர். அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 32 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்ட போது மழை சாரல் தொடங்கியது. மார்க் பௌசர் முத்தையா முரளிதரன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாச தென்னாப்பிரிக்க அணியின் ரன்கள் 229 ஆக உயர்ந்தது.
டக் வொர்த் லிவிஸ் படி 229 ரன்கள் வெற்றிக்கான ரன்கள் என ரசிகர்கள் மற்றும் வீரர்கள் நினைத்திருந்தனர். ஏற்கனவே மழை குறுக்கிட்ட காரணத்தால் 230 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மார்க் பௌசர் முரளிதரன் வீசிய கடைசி பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டி விட்டார். ரன் ஏதும் ஓடவில்லை. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட போது மழை கடுமையாக பெய்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா அவ்வருட உலகக்கோப்பை தொடரிலிருந்தும் வெளியேறியது.