ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரில் தனித்துவமாக விளங்குவதன் மூலம் காலம்காலமாக அவர்களது பெயர் உலககிரிக்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கும். க்ளின் டர்னர், கேரி கில்மர், கோர்டன் கிரினேட்ஜ், மைக் ஹேன்ரிக், டேவிட் கோவர், ரோஜர் பின்னி, கிரஹாம் குக், மெக்டெர்மோட் போன்றோர் 1975- 87 வரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். இவர்கள் தங்களது ஆட்டத்திறனுக்கென தனியாக விருது எதுவும் பெறவில்லை.
1992 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் "தொடர் ஆட்டநாயகன்" என்ற விருது ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒரு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சீரான பங்களிப்பை தங்களது அணிகளுக்கு அளித்து வந்த வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதுவரை 7 உலகக்கோப்பை தொடர்களில் வழங்கப்பட்டுள்ள இந்த விருது 3 தொடர்களில் கோப்பையை வென்ற அணியிலிருந்து யாரும் வாங்காதது குறிப்பிடத்தக்கது. மார்டின் குரோவ், லேன்ஸ் க்ளுசேனர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக தங்கள் அணி கோப்பையை வெல்லா விட்டாலும் தொடர் ஆட்டநாயகன் விருதினை இறுதிப் போட்டியில் வென்றனர். மற்ற நான்கு வீரர்களான சனத் ஜெயசூர்யா, க்ளென் மெக்ராத், யுவராஜ் சிங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருதினை வென்றனர். இவர்கள் இந்த விருதை வாங்கிய போது அவர்களது அணிகள் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
நாம் இங்கு 7 உலகக்கோப்பை தொடர்களிலும் "தொடர் ஆட்டநாயகன்" விருதினை வென்ற வீரர்களை பற்றி காண்போம்.
#1 மார்டின் குரோவ் (நியூசிலாந்து) | 1992
முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோவ் தனது அணியை மட்டும் நிர்வகிக்காமல், எதிரணி பந்துவீச்சையும் சரியான நுணுக்கத்துடன் நிர்வகித்து விளையாடினார். நியூசிலாந்தின் சிறந்த கேப்டனாகவும், ஆஃப் ஸ்பின்னரை ஆரம்ப ஓவரில் வீசச் செய்யும் நுணுக்கத்தையும் அறிமுகப்படுத்தியவர் மார்டின் குரோவ். 22 நீள ஜெர்சிக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தவர் மார்டின் குரோவ்.
இவர் நியூசிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். களத்தில் சிறந்த பேட்டிங்கும், தனது அணியை சிறப்பாக வழிநடத்துவதிலும் வல்லவராக உலகக்கோப்பை போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்களில் திகழ்ந்தார் குரோவ்.
சிறந்த ஆட்டத்திறன்: 91(83) vs பாகிஸ்தான், ஈடன் பார்க், அக்லாந்து
ஒட்டுமொத்த சாதனை: 8 போட்டிகள் | 456 ரன்கள் | 114.0 சராசரி | அதிகபட்சம் : 100* | 1 சதம், 3 அரைசதம்
#2 சனத் ஜெயசூர்யா (இலங்கை) | 1996
அதிரடி பேட்ஸ்மேன் சனத் ஜெயசூர்யா தொடக்க பௌலர்களை சிதைத்து முதல் 15 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். இவரது தொடக்க பேட்டிங் எதிரணி தொடக்க பௌளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் விதத்தில் இருக்கும்.
சில சமயம் எதிர்பாரத விதத்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறுவார். ஆனால் பல சமயம் ஜெயசூர்யா தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார். அப்போது எதிரணி பௌலர்கள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்படுவார்கள்.
சிறந்த ஆட்டத்திறன்: 82(44) மற்றும் 2/46 vs இங்கிலாந்து, இக்பால் ஸ்டேடியம் ஃபேய்ஸ்லாபாத்
ஒட்டுமொத்த சாதனை: 6 போட்டிகள் | 261 ரன்கள் | 132 ஸ்ட்ரைக் ரேட் | அதிகபட்சம் 82 | 2 அரைசதங்கள் | 7 விக்கெட்டுகள்
#3 லேன்ஸ் க்ளுசேனர் (தென்னாப்பிரிக்கா) | 1999
லேன்ஸ் க்ளுசேனர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இந்த விருதினை வென்றார். இவர் ஆட்டத்தின் தன்மைக்கேற்ப அதிரடியாகவும், நிலைத்து விளையாடும் இடத்தில் பொறுப்பான ஆட்டத்தையும் வெளிபடுத்தும் திறமை கொண்டவர். சற்று நிலைத்து இவர் நின்று விட்டால் போதும் எதிரணியின் இலக்கை சிறப்பாக அடைந்து விடுவார். தென்னாப்பிரிக்க தலைசிறந்த வீரர்களுள் இவரும் ஒருவர். இவரது தனித்திறமை என்னவென்றால் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் பொருமையாக இருப்பார்.
சிறப்பான ஆட்டத்திறன்: 46*(41), 1/41 மற்றும் 1 ரன் அவுட் vs பாகிஸ்தான் | நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ்
ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 9 போட்டிகள் | 281 ரன்கள் | 122 ஸ்ட்ரைக் ரேட் | 140.5 சராசரி | 52* அதிகபட்சம் | 17 விக்கெட்டுகள் | 2 அரைசதங்கள்
#4 சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | 2003
இந்திய தொடக்க ஆட்டக்காரரான சச்சின் 2003 உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த தொடரில் அவரது ஆரம்ப கால பேட்டிங்கை கண்டு அனைத்து ரசிகர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அயராத உழைப்பால் தொடர்ந்து சீரான ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் இந்த உலகக்கோப்பை தொடரில் வெளிபடுத்தினார். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு, ஸ்விங் மற்றும் பவுண்ஸ் பந்தை சரியாக எதிர்கொண்டு 673 ரன்களை குவித்தார்.
சர்வதேச மைதானத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து வீரர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் கோப்பையை நழுவவிட்டது.
சிறப்பான ஆட்டத்திறன்: 98(75) vs பாகிஸ்தான், சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்
ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 11 போட்டிகள் | 673 ரன்கள் | 61.18 சராசரி | அதிகபட்சம் 152 | 1 சதம் 6 அரைசதம் | 2 விக்கெட்டுகள்
#5 க்ளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) | 2007
ஆஸ்திரேலியாவின் கடந்த இரு உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் க்ளென் மெக்ராத். 2007ல் கரேபியன் மண்ணில் நடந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை(71) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் உலகக்கோப்பை தொடரின் சிறந்த ஆட்டக்காரர் ஆவார். மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக்கோப்பை தொடரில் தனி ஒருவராக 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இவரது அனல் பறக்கும் பந்துவீச்சு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிக நேரம் தங்கவிடாது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுள் மிகவும் தலைசிறந்த வீரராக இவர் உள்ளார்.
சிறப்பான ஆட்டத்திறன்: 3/18 vs தென்னாப்பிரிக்கா, கிராஸ் ஐஸ்லெட், ஸ்டே லூசியா
ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 11 போட்டிகள் | 4.41 எகானமி | 18.6 ஸ்ட்ரைக் ரேட் | 13.76 சராசரி | 26 விக்கெட்டுகள்
#6 யுவராஜ் சிங் (இந்தியா) | 2011
தனது இக்கட்டான உடல் சூழ்நிலையில் சிறப்பான ஆட்டத்திறனை பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக வெளிபடுத்தி 2011 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற பெரிதும் உதவியாக இருந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் இவரது பங்களிப்பு எந்த காலத்திலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். காலம் காலமாக இவரது சாதனை இந்திய கிரிக்கெட்டில் நிலைத்திருக்கும். இவரது மேட்ச் வின்னிங் திறன் தொடர்ந்து சீரான ஆட்டத்தை அனைத்து போட்டிகளிலும் வெளிபடுத்தி இந்திய ரசிகர்களின் 28 வருட கால உலகக்கோப்பை வெல்லும் கனவை நனவாக்கினார்.
சிறந்த ஆட்டத்திறன்: 113 vs மேற்கிந்தியத் தீவுகள் | சேப்பாக்கம், சென்னை
ஒட்டுமொத்த சாதனை: 9 போட்டிகள் | 362 ரன்கள் | 90.50 சராசரி | அதிகபட்சம் 113 | 1 சதம் 4 அரைசதங்கள் | 15 விக்கெட்டுகள்
#7 மிட்செல் ஸ்டார்க் (2015) | 2015
க்ளென் மெக்ராத்தின் வழியை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் சிறப்பான வேகத்தில் பந்துவீச்சை தனது சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் மேற்கொண்டார். அதிகபடியான இன்னிங்ஸில் தனது மின்னல் வேக பந்துவீச்சை வீசி பேட்ஸ்மேனின் இதயத்தை படபடக்கச் செய்து தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். இவரது வெவ்வேறு வகையான பந்துவீச்சு தனித் திறமையாக திகழ்ந்தது.
எதிரணி பேட்டிங்கை தடுமாறச் செய்து ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியா வசம் திருப்புவார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியாக வெளிபடுத்துவார்.
சிறந்த ஆட்டத்திறன்: 6/28 vs நியூசிலாந்து, ஈடன் பார்க், ஆக்லாந்து
ஒட்டுமொத்த சாதனை: 8 போட்டிகள் | 3.50 எகானமி ரேட் | 17.40 ஸ்ட்ரைக் ரேட் | 10.18 சராசரி | 22 விக்கெட்டுகள்