ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் "தொடர் ஆட்டநாயகன்" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்

Both Sachin Tendulkar and Lance Klusener have been awarded man of the series in World Cups
Both Sachin Tendulkar and Lance Klusener have been awarded man of the series in World Cups

#3 லேன்ஸ் க்ளுசேனர் (தென்னாப்பிரிக்கா) | 1999

Lance Klusener (South Africa) | 1999
Lance Klusener (South Africa) | 1999

லேன்ஸ் க்ளுசேனர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இந்த விருதினை வென்றார். இவர் ஆட்டத்தின் தன்மைக்கேற்ப அதிரடியாகவும், நிலைத்து விளையாடும் இடத்தில் பொறுப்பான ஆட்டத்தையும் வெளிபடுத்தும் திறமை கொண்டவர். சற்று நிலைத்து இவர் நின்று விட்டால் போதும் எதிரணியின் இலக்கை சிறப்பாக அடைந்து விடுவார். தென்னாப்பிரிக்க தலைசிறந்த வீரர்களுள் இவரும் ஒருவர். இவரது தனித்திறமை என்னவென்றால் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் பொருமையாக இருப்பார்.

சிறப்பான ஆட்டத்திறன்: 46*(41), 1/41 மற்றும் 1 ரன் அவுட் vs பாகிஸ்தான் | நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ்

ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 9 போட்டிகள் | 281 ரன்கள் | 122 ஸ்ட்ரைக் ரேட் | 140.5 சராசரி | 52* அதிகபட்சம் | 17 விக்கெட்டுகள் | 2 அரைசதங்கள்


#4 சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | 2003

Sachin Tendulkar (India) | 2003
Sachin Tendulkar (India) | 2003

இந்திய தொடக்க ஆட்டக்காரரான சச்சின் 2003 உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்‌. இந்த தொடரில் அவரது ஆரம்ப கால பேட்டிங்கை கண்டு அனைத்து ரசிகர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அயராத உழைப்பால் தொடர்ந்து சீரான ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் இந்த உலகக்கோப்பை தொடரில் வெளிபடுத்தினார். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு, ஸ்விங் மற்றும் பவுண்ஸ் பந்தை சரியாக எதிர்கொண்டு 673 ரன்களை குவித்தார்.

சர்வதேச மைதானத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து வீரர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் கோப்பையை நழுவவிட்டது.

சிறப்பான ஆட்டத்திறன்: 98(75) vs பாகிஸ்தான், சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்

ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 11 போட்டிகள் | 673 ரன்கள் | 61.18 சராசரி | அதிகபட்சம் 152 | 1 சதம் 6 அரைசதம் | 2 விக்கெட்டுகள்

PREV 2 / 3 NEXT

Quick Links

Edited by Fambeat Tamil