#5 க்ளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) | 2007
ஆஸ்திரேலியாவின் கடந்த இரு உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் க்ளென் மெக்ராத். 2007ல் கரேபியன் மண்ணில் நடந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை(71) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் உலகக்கோப்பை தொடரின் சிறந்த ஆட்டக்காரர் ஆவார். மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக்கோப்பை தொடரில் தனி ஒருவராக 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இவரது அனல் பறக்கும் பந்துவீச்சு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிக நேரம் தங்கவிடாது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுள் மிகவும் தலைசிறந்த வீரராக இவர் உள்ளார்.
சிறப்பான ஆட்டத்திறன்: 3/18 vs தென்னாப்பிரிக்கா, கிராஸ் ஐஸ்லெட், ஸ்டே லூசியா
ஒட்டுமொத்த ஆட்டத்திறன்: 11 போட்டிகள் | 4.41 எகானமி | 18.6 ஸ்ட்ரைக் ரேட் | 13.76 சராசரி | 26 விக்கெட்டுகள்
#6 யுவராஜ் சிங் (இந்தியா) | 2011
தனது இக்கட்டான உடல் சூழ்நிலையில் சிறப்பான ஆட்டத்திறனை பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக வெளிபடுத்தி 2011 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற பெரிதும் உதவியாக இருந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் இவரது பங்களிப்பு எந்த காலத்திலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். காலம் காலமாக இவரது சாதனை இந்திய கிரிக்கெட்டில் நிலைத்திருக்கும். இவரது மேட்ச் வின்னிங் திறன் தொடர்ந்து சீரான ஆட்டத்தை அனைத்து போட்டிகளிலும் வெளிபடுத்தி இந்திய ரசிகர்களின் 28 வருட கால உலகக்கோப்பை வெல்லும் கனவை நனவாக்கினார்.
சிறந்த ஆட்டத்திறன்: 113 vs மேற்கிந்தியத் தீவுகள் | சேப்பாக்கம், சென்னை
ஒட்டுமொத்த சாதனை: 9 போட்டிகள் | 362 ரன்கள் | 90.50 சராசரி | அதிகபட்சம் 113 | 1 சதம் 4 அரைசதங்கள் | 15 விக்கெட்டுகள்
#7 மிட்செல் ஸ்டார்க் (2015) | 2015
க்ளென் மெக்ராத்தின் வழியை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் சிறப்பான வேகத்தில் பந்துவீச்சை தனது சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் மேற்கொண்டார். அதிகபடியான இன்னிங்ஸில் தனது மின்னல் வேக பந்துவீச்சை வீசி பேட்ஸ்மேனின் இதயத்தை படபடக்கச் செய்து தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். இவரது வெவ்வேறு வகையான பந்துவீச்சு தனித் திறமையாக திகழ்ந்தது.
எதிரணி பேட்டிங்கை தடுமாறச் செய்து ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியா வசம் திருப்புவார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியாக வெளிபடுத்துவார்.
சிறந்த ஆட்டத்திறன்: 6/28 vs நியூசிலாந்து, ஈடன் பார்க், ஆக்லாந்து
ஒட்டுமொத்த சாதனை: 8 போட்டிகள் | 3.50 எகானமி ரேட் | 17.40 ஸ்ட்ரைக் ரேட் | 10.18 சராசரி | 22 விக்கெட்டுகள்