"ஜென்டில்மேன் கேம்" என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை மனிதநேயம் வெளிப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா டெல்லி அணியின் இளம்புயல் ரிஷப் பன்ட் ஷூ லேசை கட்டிவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது. அதேபோல், சர்வதேச போட்டிகளிலும் பல முறை மனித நேயம் வென்றுள்ளது. அவ்வாறு, உலக கோப்பை தொடர்களில் மூன்று சிறந்த அறத்துடன் விளையாடி மனிதநேயத்தை வெளிப்படுத்திய மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3. 2015 அரையிறுதிப் போட்டியில் டேல் ஸ்டெயினிடம் மனித நேயத்தை வெளிப்படுத்திய கிராண்ட் எலியட்:
2015 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிராண்ட் எலியட் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டேல் ஸ்டெயினின் பந்துவீச்சில் சிக்சர் அடித்தார், கிராண்ட் எலியட். அதன்பின்னர், ஒட்டு மொத்த தென்னாப்பிரிக்க அணியை மைதானத்தில் விழுந்து கதறி அழுதனர். அதேபோல், வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டைன் மைதானத்தில் கதறி அழுத காட்சியை கண்ட கிராண்ட் எலியட் தனது கரத்தினை நீட்டி தோல்வியடைந்த ஸ்டெயினிடம் ஊக்குவிக்கும் படி சில வார்த்தைகளை பேசினார். இது அந்தத் தொடரிலேயே சிறந்த அறத்தை போதித்த போட்டியாக அமைந்தது.
#2.பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்கட் வாய்ப்பினை பயன்படுத்தாத வால்ஷ்:
1987ஆம் ஆண்டு லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்துல் காதீர் மற்றும் சலீம் ஜாபர் ஆகியோர் களத்தில் நின்றனர். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிவேகமாக பந்துவீச வால்ஷ்முற்பட்டபோது நான் ஸ்ட்ரைக்கில் நின்ற ஜாபர் கிரீஸை விட்டு சற்று நகர்ந்தார். பந்துவீச்சாளர் வால்ஷ் மன்கட் முறையில் வாசிம் ஜாபரை ஆட்டமிழக்க செய்யாமல் மீண்டும் சென்று பந்து வீச முற்பட்டார். அக்காலகட்டத்தில் மிகவும் பாராட்டப்பட்ட அறத்தின் வெளிப்பாடாகவே அந்த போட்டி கருதப்பட்டது.
#1.ஸ்டீவன் ஸ்மித்திற்கு ஆதரவாக செயல்பட்ட விராட் கோலி:
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்நேரத்தில் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி ஓராண்டுக்கு பின்னர் மீண்டு வந்த ஸ்டீவன் ஸ்மித்திற்கு எதிராக இந்திய அணி ரசிகர்கள் சிலர் கூச்சலிட்டனர். இதனை கண்டு ஆவேசமடைந்த விராத் கோலி ரசிகர்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கூக்குரலிட்டார். விராட் கோலி ரசிகர்களிடம், "ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஓர் ஆண்டு தண்டனை அனுபவித்த பின்னர் திரும்பியுள்ளனர். எனவே, அவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் அமைதி ஆகினார். எனவே, அந்தப் போட்டியில் துரிதமாக செயல்பட்டு ரசிகர்களின் செயற்பாட்டை கண்டித்த விராத் கோலியின் அணுகுமுறை சமீப நாட்களில் மிகவும் பேசும் பொருளானது.