50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7வது முறையாக 2019 ஜீன் 16 ஞாயிறு அன்று மோத உள்ளன. கடந்த 6 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தனது சொந்த கண்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து கண்டங்களிலும் வீழ்த்தியுள்ளது. இந்திய அணி அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது.
இந்திய 1975 மற்றும் 1979 ஆண்டுகளில் மிகவும் மோசமான ஆட்டத்துடன் இருந்தது. அந்த சமயத்தில் உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ளவில்லை. 1983ல் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய போது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் தகுதிப் பெற்றிருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளினால் அரையிறுதியில் பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது.
1987ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி தகுதிச் சுற்றில் நியூசிலாந்திற்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லாகூரில் நடைபெற இருந்த இந்திய-பாகிஸ்தான் போட்டியை தடுத்தது. இருப்பினும் இரு அணிகளுமே அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளால் வெளியேற்றப்பட்டன.
உலகக் கோப்பை தொடரை நடத்துபவர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் ஒளிபரப்பாளர்கள் என அனைவருமே அனைத்து உலகக்கோப்பை போட்டிகளின் தகுதிச் சுற்றிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர்.
அதன்படி சிட்னியில் நடந்த 1992 உலகக் கோப்பை தொடரிலிருந்து தொடங்கி, 1996, 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. 2007 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்பார விதமாக வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. அயர்லாந்து அணி முதன்மை சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
2011 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உலகக் கோப்பை தொடரில் நடந்தது, அத்துடன் 2015 உலகக் கோப்பை தொடரிலும் தொடர்ந்தது. தற்போது பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை தொடரில் 7வது முறையாக மோத உள்ளன. இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே தழுவாத இந்திய அணி சற்று நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த சாதனையை தொடர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.
2019 உலகக் கோப்பை தொடர் முழுவதும் மழை மற்றும் அதிக ஈரப்பதத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது உலகக் கோப்பை மீது ரசிகர்கள் வைத்திருந்த ஆர்வத்தை பாழ் படுத்துகிறது. மழைக் காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் பாதிப்படைவதால் ரசிகர்கள் அதிகம் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இது உலகக் கோப்பை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது போல் உள்ளது.
நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் சிறந்த 3 போட்டிகள் பற்றி காண்போம்.
#3 குழு சுற்று, சென்சூரியன்,2003
இந்திய அணி 2003 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 6 சுற்றில் செஞ்சூரியனில் பாகிஸ்தானிற்கு எதிராக மோதியது. இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் மோதும் முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை தவிர இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கிட்டத்தட்ட அந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்திய அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் களமிறங்கியது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் இப்போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
ஷாய்ட் அன்வரின் சிறப்பான சதத்தின் மூலம் பாகிஸ்தான் 273 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. சற்று அதிகப்படியான இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் விரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர், வாஹார் யோனிஷ் போன்ற சிறப்பான பந்துவீச்சை சரியாக எதிர்கொண்டு அதிரடி துவக்கத்தை அளித்தனர்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியை வெளிபடுத்தும் மனநிலையில் இருந்தனர். இரண்டாவது ஓவரை வீச வந்த சோயிப் அக்தர் வீசிய முதல் பந்தில் சச்சின் டெண்டுல்கர் சிகஸரும், அடுத்த இரு பந்துகளில் இரு பவுண்டரிகளையும் விளாசினர். இதைத்தொடர்ந்து விரேந்தர் சேவாக்கும் வாஹார் யோனிஷ் வீசிய ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசினார்.
வாஸீம் அக்ரமை பந்து வீச களமிறக்கவில்லை. இந்திய அணி முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களை குவித்தது. சேவாக் விக்கெட் வீழ்ந்த பின் கங்குலி அந்த பொறுப்பை ஏற்று விளையாடினார். பின்னர் முகமது கைப் களமிறங்கி பொறுப்பான மற்றும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரமித்தார்.
சச்சின் டெண்டுல்கர் தனது அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்து 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். வாஸிம் அக்ரம் தான் வீசிய முதல் ஓவரில் 18 ரன்களை வழங்கினார். பின்னர் இரண்டாவது ஓவரை வீச களமிறங்கினார். சச்சின் டெண்டுல்கர் இவர் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் 18 ரன்களை குவித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது.
சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களில் இருந்த போது வாஸிம் அக்ரம் வீசிய ஷார்ட் பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இருப்பினும் இந்திய அணி 28 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சினின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்.
யுவராஜ் சிங் அரைசதம் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். ராகுல் டிராவிட் 44 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றது. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அதிரடி இன்னிங்ஸ் மற்றும் சேவாக்கின் சிறந்த தொடக்க ஆட்ட பங்களிப்பு சிறப்பாக வெளிபட்டது.