உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்

One of the long-lasting memories of India-Pakistan encounter
One of the long-lasting memories of India-Pakistan encounter

#2 காலிறுதி, பெங்களூரு, 1996

Venkatesh Prasad - The hero of India's win against Pakistan in World Cup 1996
Venkatesh Prasad - The hero of India's win against Pakistan in World Cup 1996

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரில் நடந்த காலிறுதியில் 1996 உலகக் கோப்பை தொடரில் மோதின. உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றில் மோதின. 1992 உலகக் கோப்பை சேம்பியன் பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் இந்தியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா வென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்திய அணி தனது சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. இது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரு அணிகளும் பெங்களூருவில் நடந்த இப்போட்டியில் மோதின.

இந்திய இப்போட்டியை மிகவும் சிறப்பாக தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாஸீம் அக்ரமிற்கு காயம் ஏற்பட்டதால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். இதனால் பாகிஸ்தான் கேப்டன் ஆமீர் சோஹாலி பந்து வீச்சை மேற்கொண்டார். பாகிஸ்தான் அணி ஒரு முக்கிய டாஸ் வெல்லும் வாய்ப்பை இழந்து கடும் வெயிலில் ஃபீல்டிங் செய்ய அனுப்பப்பட்டது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நவ்ஜோட் சித்து மற்றும் சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை குவித்தனர். பின்னர் சச்சின் டெண்டுல்கர் அதா-ஊர்-ரெக்மானால் வீழ்த்தப்பட்டார். சித்து நிலைத்து விளையாடி 93 ரன்களை குவித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் 250 அல்லது அதற்கு குறைவான ரன்களிலேயே வீழ்த்தி விடும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அஜய் ஜடேஜா, வாஹார் யோனிஷ் பந்துவீச்சை சிதறடித்து கடைசி இரு ஓவர்களில் 40 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் வாஸீம் அக்ரமின் யாரக்கரை டெத் ஓவரில் அதிகமாக மிஸ் செய்தது. அனில் கும்லே மற்றும் ஜவஹால் ஶ்ரீ நாத் ஆகியோரும் இந்திய அணியின் இக்கட்டான சூழ்நிலையில் இரு சிக்ஸர்களை விளாசினர். இந்திய அணி கடைசி 4 ஓவரில் 57 ரன்களை விளாசி 287 ரன்களை பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் பதிலடி தரும் விதமாக முதல் 10 ஓவர்களில் 87 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சையித் அன்வரை, ஶ்ரீநாத் வீழ்த்தினார். பாகிஸ்தான் 113 ரன்களில் 1 விக்கெட்டை இழந்திருந்த போது பாகிஸ்தான் கேப்டன் ஆமேர் சொஹாய்ல் பவுண்டரி விளாசிய பின் வென்கடேஷ் பிரசாந்திடன் மோதலில் ஈடுபட்டதால் தனது மனநிலையை சற்று இழந்தார். அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாந்த் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதற்கு பிறகு லீஜா ஜவாத் மற்றும் இன்ஜ்மாம்-உல்-ஹக் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார் வெங்கடேஷ் பிரசாந்த். இதனால் சலீம் மாலிக் மற்றும் ஜவாட் மியாலேன்ட் ஆகியோரால் சற்று கடின இலக்கை அடைய நிலைத்து விளையாட இயலவில்லை. இறுதியாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா புகழ்பெற்ற வெற்றியை பதிவு செய்தது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications