#1 அரையிறுதி, மொஹாலி, 2011
இந்திய அணி 2011 உலகக் கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை சந்தித்து. டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
உமர் குல்லின் வேகப்பந்து வீச்சை சரியாக எதிர்கொண்டு இவரது இரண்டாவது ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்கும் முன்பாக சேவாக் 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். சச்சின் டெண்டுல்கர் தனது அதிரடியை பாகிஸ்தானிற்கு எதிராக வெளிபடுத்த தவறவில்லை. 4 முறை இவரது கேட்ச் தவறப்பட்டது அத்துடன் இரு முறை DRS மூலம் காப்பற்றப்பட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்தார்.
மகேந்திர சிங் தோனி (25) மற்றும் சுரேஷ் ரெய்னாவின்(36) சிறப்பான ஆட்டத்தால் 260 என்ற சற்று கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களில் தடுமாறியது. அஷாத் சஃபிக் மற்றும் யோனிஷ் கான் ஆகியோரை யுவராஜ் சிங் தனது மாயாஜால சுழலினால் வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உமர் அக்மல் மற்றும் கேப்டன் ஷாஹீத் அப்ரிடியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
மிஸ்பா-உல்-ஹக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவர் வரை நிலைத்து விளையாடினார். ஆனால் இந்தியா நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியாக இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.