தென் ஆப்பிரிக்கா அணியில் நட்சத்திர வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதுவரை 228 ஒருநாள் போட்டிகளில் 9577 ரன்கள், சராசரி 53.50 மற்றும் 25 சதங்கள் அடித்துள்ளார். 114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்கள், சராசரி 50.66. 78 டி-20 போட்டிகளில் 1672 ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான ஏ.பி.டி.வில்லியர்ஸ் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பே ஓய்வை அறிவித்தார்.
"உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே என்னைப் பற்றி மதிப்பிட முடியாது" என்று டி.வில்லியர்ஸ் கூறினார். ஏற்கனவே டி.வில்லியர்ஸ் பேட்டிங்கில் யாரும் செய்ய முடியாத பல உலக சாதனைகள் படைத்துள்ளார். டி.வில்லியர்ஸ் கூறியதை போல உலகக்கோப்பை வென்று தன்னை சிறந்த வீரர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அளவிற்கு சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் மிடில்சேக்ஸ் அணிக்கு டி-20 சூப்பர்ஸ்டாரான டி.வில்லியர்ஸ் இந்த சீசனில் சேர இருப்பதாக சமீபத்தில் மிடில்சேக்ஸ் நிர்வாகம் அறிவித்தது. ஏ.பி.டி. அவர்கள் எங்கள் அணிக்கு விளையாட உள்ளது உற்சாகமாக இருப்பதாக மிடில்சேக்ஸ் நிர்வாகம் கூறியது.
"கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நல்ல கிளப்பில் சேர்ந்து விளையாடுவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. சர்வதேச அணியில் விளையாடும் போது நேரம் சரியாக இருந்தது. லார்ட்ஸில் கிரிக்கெட் விளையாடுவது சிறப்பாக இருக்கும். லார்ட்ஸில் விளையாடிய சிறந்த நினைவுகள் இன்னும் இருக்கின்றன" என்றும் குறிப்பிட்டார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் டி.வில்லியர்ஸ் விளையாடினார். ஆனால் ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை. அவருக்கு மட்டுமல்லாமல் அனைத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கும் உலகக்கோப்பையை வெல்வது கனவு இருந்தது. 2015-ஆம் ஆண்டு அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். ஏ.பி.டி. ஓய்வு பெற்ற நிலையில் இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பையை வென்றாலும் அந்த அணியில் அவர் பங்களிக்க மாட்டார்.
"உலகக்கோப்பை வெற்றி என்னை வரையறுக்காது என்பதே உண்மை. எனது கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது. என் நாட்டைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என் வாழ்க்கையில் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன்" என்று டி.வில்லியர்ஸ் கூறினார்.
தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பையை 2019-ஆம் ஆண்டு வெல்லலாம் அல்லது அதற்கு பிறகு வெல்லலாம். ஆனால் டி.வில்லியர்ஸ் உலகக்கோப்பை வெல்லும் அணியில் ஒரு பகுதியாக இருக்கமாட்டார். டி.வில்லியர்ஸின் ஆட்டங்கள் எப்போதும் மிகப்பெரிய ஒன்றாகக் கருத வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டி.வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற பிறகும் உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 போட்டிகளில் பங்கு பெற்று அசத்தி வருகிறார். அடுத்தபடியாக வரும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் விராத் கோலியுடன் இணைந்து விளையாடவுள்ளார்.
எழுத்து- Fambeat
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்