4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.2019 உலகக் கோப்பையில் பத்து அணிகள் விளையாடுகின்றன.12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30ம் தேதி தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிகிறது. உலக்க கோப்பை ஆரம்பிக்கும் முன்பாக அனைத்து அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியுள்ளனர்.
இந்திய அணியின் தற்போது கேப்டனான விராட் கோலி அதிக சதங்கள், அதிக ரன்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியவர்.இவர் பல சாதனைகளுக்கு சொந்தகாரர். ஆனால் இந்த வருடம் இவர் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் எடுத்த வேகமான வீரர் :
முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சிறந்த பேட்ஸ்மனாக விராட் கோலி கருதப்படுகிறார். விராட் கோலி தற்போது லிட்டில் மாஸ்டராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பல சதங்களை அடித்துள்ளார் எனவே அதிக சதம் அடித்த வீரராக திதழ்கிறார் ஆனால் விராட் கோலி இன்னும் ஒருசில சதங்களில் டெண்டுல்கரின் சாதனையை எட்டிவிடுவார். இந்த போட்டியில் 9 ஒன்பது சதங்கள் மட்டும் அடித்தால் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை அடித்த முதல் வீரர் ஆவார்.
முன்னதாக, 2018 அக்டோபரில் விராட் 10000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரராவார். இவர் இதை 205 ஓடிஐ இன்னிங்சில் டெண்டுல்கரை விட 54 குறைவான இன்னிஸ்சில் அடித்துள்ளார். இப்போது 10843 ரன்களை 219 ஓடிஐ இன்னிஸ்சில் அடித்துள்ளார். இன்னும் 157ரன்களை அடித்தால் மீண்டும் அதிக ரன்களை அடித்தவர் ஆவார். இந்த முறை புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரே ஒரு உலகக் கோப்பையில் இந்திய கேப்டனின் பெரும்பாலான சதம்
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் இவர் தற்போது சிறந்த ஃபார்ம்ல் இருகிறார். 2019 ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ரன்கள் எடுத்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களை விளையாடி சிறப்பான தொடக்கத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் மிகவும் உறுதியான வீரர்களில் ஒருவரான இந்திய கேப்டன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 59.58 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.
தற்போது, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்தவர் என்று சாதனை படைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் அவர் மூன்று சதங்களை அடித்தார். இந்த ஆண்டு, இந்தியா ஒன்பது லீக் போட்டி போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, இதில் வெற்றி பெற்று நாக் அவுட் ஸ்டேஜ் சென்றால், 16 வருடங்களாக உள்ள சாதனையை கோலி முறியடிப்பார்.
ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்
2003 உலகக் கோப்பையின் முடிவில், சவுரவ் கங்குலி 11 போட்டிகளில் 465 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 58.12 சராசரியாக, அதிக ரன்கள் எடுத்த ஒரு இந்திய கேப்டன் ஆவார். சிறப்பான பார்மில் உள்ள கோலி நிச்சியம் இந்த உலக கோப்பையில் கங்குலியின் சாதனையை முறியடிப்பார். மேலும் இந்த முறை தனது தலைமையில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பார்.
இவர் விளையாடிய 17 உலகக் கோப்பை போட்டிகளில் 587 ரன்கள் சராசரியாக 41.92 இருகிறது.