12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடர மே 30ம் தேதி தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிகிறது. இந்தியா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,தென்ஆப்ரிக்கா,நியூசிலாந்து,இலங்கை,வங்காளதேசம்,ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் என பத்து அணிகள் போட்டியிடுகின்றன. 12 வது உலகக் கோப்பை போட்டியில் முதலில் போட்டியிட்ட இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவிடம் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியான இன்று பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன.பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சிறந்த வீரர்களை கொண்டு பலம் வாய்ந்த அணியாக திகழ்கின்றன.கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து அணியுடன் மோதி தொடரை இழந்தது. ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 421 ரன்கள் எடுத்ததுடன், 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மறுபுறத்தில், பாகிஸ்தான் கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றது. 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி முதல் மற்றும் கடைசியாக உலக கோப்பை வென்றது.
1.வெஸ்ட் இண்டீஸ்
விளையாடும் வீரர்கள்:
கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷை ஹோப் , சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன் / டேரன் பிராவோ, ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஷானோன் கேப்ரியல், ஷெல்டன் கோட்ரெல், ஆஷ்லே நர்ஸ்.
பலங்கள்:
இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரா ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.இவர்கள் நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.கெய்ல் மற்றும் ரசல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடுவார்.இந்த T20 சிறந்த வீரர்களை தவிர, இளம் ஷை ஹோப் தற்போது சிறப்பாக விளையாடுவதால் இந்த உலகக் கோப்பையில் இவரின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கும்.
பலவீனங்கள்:
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நரைன், கியொரோன் பொல்லார்ட் மற்றும் டேரன் பிராவோ ஆகியோரின் சேவை இழந்ததால் அணியின் வெற்றிகாக சிறிது போராட வேண்டும். நரைன் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் அதிக விக்கெட்களை எடுக்கும் வீரர் என்பதால் இவர் இல்லாதது அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும். கெயில் ஒரு நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவர் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறும் போது, அவர் மிகவும் மெதுவாக தொடங்குவார். ஆனால் இவர் அதிக ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அலைத்து சென்றார்.
2.பாகிஸ்தான்
விளையாடும் வீரர்கள்:
பாக்கர் ஷமான், இமாம் உல்-ஹக், பாபர் ஆஸம், சோயிப் மாலிக் / ஹரிஸ் சொஹைல், முகமது ஹபீஸ், ஆசிப் அலி, சர்பார்ஸ் அகமது, சதாப் கான், ஹாசன் அலி, வஹாப் ரியாஸ், ஷாஹீன் அப்ரிடி / முகமது அமீர்.
பலங்கள்:
கடைசியாக விளையாடிய பத்து போட்டிகளில் பாக்கிஸ்தான் தோல்வி அடைந்தாலும்,கடின பயிற்சியால் பேட்ஸ்மேன்கள் தற்போது சீரராக விளையாடுகின்றனர். பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கு ஒரு 'ரன்-இயந்திரம்'. தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கின் தொடக்கத்தில் ஆதரவாக இருந்தவர் பாபர். ஃபகார் ஜமான் மீண்டும் ஃபார்ம்க்கு வருவதன் மூலம், பாகிஸ்தான் பேட்டிங் நல்ல முறையில் இருக்கிறது. பாகிஸ்தானின் டாஸில் வெற்றி பெற்றால்,பந்துவீசு தேர்வு செய்தால் சிறந்தது.
பலவீனங்கள்:
பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் நல்ல முறையில் இருந்தாலும் இவர்களின் பந்துவீச்சு மிக மோசமான நிலையில் இருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பந்துவீசுபவர்களுக்கு ஆலோசனை கூறி பயிற்சி தர வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்?
இரு தரப்பினரின் நல்ல ஃபார்ம் இருப்பதைக் கொண்டு, மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல தொடக்கத்தை தொடங்கும். கிறிஸ் கெய்ல், ஷை ஹோப் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர்களை பாக்கிஸ்தானுக்கு கையாள்வது என்பது மிக கடினமாக இருக்கும். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்