4 ஆண்டுகளுக்கு ஒரு முறைநடைபெறும் உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இதுவரை ஐந்து போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று மாலை 6வது போட்டி நடை பெற உள்ளது.இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
எனவே நாம் இங்கு இப்போட்டி பற்றிய முழு தகவல்களையும் காண்போம்.
போட்டி விவரங்கள்: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து
எங்கே : இங்கிலாந்து, நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எப்போது :ஜூன் 3, 2019, இந்திய நேரப்படி மிதயம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. ( 09:30 AM GMT / 10:30 AM உள்ளூர் )
#1.இங்கிலாந்து அணி :

இந்த ஆண்டு உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புள்ளது. கடந்த மே 17 ம் தேதி பாக்கிஸ்தான் எதிராக ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் இணைந்து சிறப்பாக விளௌயாடியதால் தற்போது மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இணைகின்றனர்.
முக்கிய வீரர்கள் :
ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், மோர்கன் ஆகியோர் இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்டிங் வீரர்கள். வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் இன்றைய ஆட்டத்தில் இன்று விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
எதிர்பார்க்கப்படும் 11
ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட்
#2.பாகிஸ்தான் அணி :

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சமாளிக்க முடியாமல் 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வெஸ் இண்டீஸ் அணி வீசிய ஷாட்பிச் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறியதால் தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. தற்போது பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மேதுகிறது.
முக்கிய வீரர்கள் :
பாபர் அசாம், இமாம் உல் ஹக், சர்ப்ராஜ் கான், முகமது ஹபீஸ் ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பேட்டிங் வீரர்கள். பந்துவீசுவதில் இன்று ஷாஹின் அப்ரிடி மற்றும் முகம்மது அமீர் அதிக விக்கெட்களை எடுக்க வாய்ப்புகள் உண்டு.
எதிர்பார்க்கப்படும் 11
சாத்தியமான லெவன்: இமாம்-உல்-ஹக், சமான், பாபர் ஆஸம், ஹரிஸ் சொஹைல், சர்ஃபராஜ் அகமது, முகமது ஹபீஸ், இமாத் வாசிம் / ஷாஹீன் அப்ரிடி, சதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்.
வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி :
கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சார் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதால் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு.