சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் திறமையான பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் பல பேர் இருக்கின்றனர். அதிலும் சில பந்துவீச்சாளர்கள் மிகவும் வேகமாகப் பந்து வீச கூடிய திறமை படைத்தவர்கள். அவ்வாறு வேகமாக வீசப்படும் பந்துகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் ஹெல்மெட் அணிந்து விளையாடுவார்கள். இவ்வாறு ஹெல்மெட் அணிந்து விளையாடியும் எதிர்பாராத விதமாக பந்து பட்டு சில வீரர்கள் இளம் வயதிலேயே இறந்துள்ளனர். அந்த சோகமான நிகழ்வுகளை பற்றி இங்கு காண்போம்.
#1) பிளிப் ஹியூஸ்:
இவர் ஆஸ்திரேலியநாட்டைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக வெறும் 26 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களையும், 7 அரைச்சதங்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் அதிகமாக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 26 சதங்களையும், 46 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அபாட் என்ற பந்துவீச்சாளர் வீசிய பந்து, அவரது தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கியது. பந்து தலையில் பட்ட சில நிமிடங்களில் மைதானத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது நெருங்கிய நண்பரான ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இவரது இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்த கோப்பையை பிளிப் ஹியூஷிற்கு சமர்ப்பிக்கிறோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இளம் வயதிலேயே இவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.
#2) வாசிம் ராஜா:
இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். இவர் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களையும், 18 அரைசதங்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது "ஹார்ட் அட்டாக்" வந்து மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர். இந்த நிகழ்வு மைதானத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இவர் பாகிஸ்தான் அணிக்கு பகுதி நேர கீப்பராகவும் இருந்துள்ளார். அவ்வாறு கீப்பராக இருந்தபொழுது 24 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.