இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். யுவராஜ் சிங் 2000ம் ஆண்டு முதன் முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சேம்பியன்ஸ் டிராபி போட்டியில் அறிமுகமானார். யுவராஜ் சிங் இடது கை பேட்மேனாகவும் ஆல்ரவுண்டாராகவும் இந்திய அணியில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். யுவராஜ் சிங் 2003ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையே அவரின் முதல் உலககோப்பை தொடராகும். இந்திய அணியில் தொடர்ந்து சிறந்த வீரராக விளையாடி வந்த யுவராஜ் சிங் மகேந்திர சிங் தோனி கேப்டனாக காலத்தில் 2007-08 ஆம் ஆண்டுகள் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார்.
இந்திய அணியில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினார். அதன் பின்னர் நடைபெற்ற 2007 ஆம் ஆண்டு டி-20 கிரிக்கெட் உலககோப்பை தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் சிறந்த வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அதே 2007ம் டி-20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார் யுவராஜ் சிங்.
அதன் பின்னர் நடைபெற்ற 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய யுவராஜ் சிங் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். 2011ம் ஆண்டு உலககோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக சற்று ஓய்வில் இருந்த யுவராஜ் சிங் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அணியில் இடம் பிடித்தார். எனினும் பழைய யுவராஜ் சிங்கை இந்திய ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.
அதன் பின்னர் நடைபெற்ற 2014ம் ஆண்டு டி-20 உலககோப்பை இறுதி போட்டியில் யுவராஜ் சிங் 22 பந்துகளுக்கு 11 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் விமர்சனங்களுக்கு உட்பட்டார் யுவராஜ் சிங். அதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தடுமாறி வந்த யுவராஜ் சிங் தற்போது நடைபெறும் உலககோப்பை தொடரிலும் இடம் பெறாத நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் இதுவரை இந்திய அணிக்காக 402 போட்டிகள் விளையாடி உள்ளார். அதில் 40 டெஸ்ட் போட்டிகளும், 304 ஒரு நாள் போட்டிகளும், 58 டி-20 போட்டிகளும் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெடில் யுவராஜ் சிங் 11,778 ரன்களை அடித்துள்ளார். யுவராஜ் சிங் இதுவரை 17 சதங்களும் 71 அரைசதங்களும் விளாசி உள்ளார். அதோடு ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங் இதுவரை ஐபிஎல் தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐத்ராபாத், டெல்லி , மும்பை இன்டியன்ஸ், புனே, பெங்களுரு அணிகளுக்காக விளையாடி உள்ளார். யுவராஜ் சிங் (2000-2019 ) 19 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.