இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் 2019 உலகக் கோப்பை வெல்லும் அணியாக தற்போது திகழ்கிறது என இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை பற்றி யுவராஜ் சிங் கூறியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய டாப் 2 அணிகள் 2019 உலகக் கோப்பை வெல்லும் அணிகளாக திகழ்கிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கும் சிறிது வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
" என்னுடைய ஒப்பீட்டின்படி முதல் இரு அணிகள் இங்கிலாந்து மற்றும் இந்தியா. ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் அந்த அணிக்கும் வாய்ப்புள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி அருமையான பவர் ஹீட்டர்களை கொண்ட அணியாக உலகக் கோப்பையில் உள்ளது. நான் இப்போது அதிக எதிர்பார்ப்பை வெளிபடுத்த தயாராக இல்லை. உலகக் கோப்பையில் என்னுடைய கணிப்பில் முதல் இரு இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளன. மூன்றாவதாக ஆஸ்திரேலியா உள்ளது. நான்காவது அணி எனக்கு தெரியாது. பின்னர் தெரிவிக்கிறேன்.
ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியா பற்றியும் யுவராஜ் சிங் சில வார்த்தைகளை கூறினார். ஹர்திக் பாண்டியா ஆட்டத்திறன் உலகக் கோப்பையிலும் தொடரும் என தான் நம்புவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்திறனை தற்போது பார்க்கும் போது உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்வார் என தெரிகிறது. கண்டிப்பாக உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா ஆட்டத்திறன் தொடரும் என நம்புகிறேன். ஹர்திக் பாண்டியா பௌலிங் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பாக எடுபடும். எதிரணி தரும் நெருக்கடியை வ்வாறு கையாளுகிறார் என்பதை பொறுத்தே இவரது ஆட்டத்திறன் அமையும். ஹர்திக் டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் நெருக்கடியை சமாளிக்கிறார். இதே ஆட்டத்திறன் உலகக் கோப்பையிலும் இருக்கும் என நம்புகிறேன்
2019 உலகக் கோப்பையில் பல கிரிக்கெட் வள்ளுநர்களின் விருப்ப அணியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து திகழ்கிறது. அத்துடன் இந்த தொடரில் அதிக கவணிக்கப்படும் அணிகளாகவும் இந்த இரு அணி உள்ளது. இரு அணிகளும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் சிறப்பான பௌலிங்கையும் வைத்துள்ளனர்.
இந்திய ஆல்-ரவுண்டர் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். அத்துடன் அணியின் 3 வது வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார். இங்கிலாந்தில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டர்களாக உள்ளனர். கிறிஸ் வோக்ஸ் பவர் பிளேவிலும் சிறப்பாக பந்து வீசும் திறமை கொண்டிருப்பது இங்கிலாந்து அணியின் கூடுதல் பலமாகும்.
இந்த இரு அணிகளை தவிர ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை யுவராஜ் சிங் குறிப்பிட்டிருந்தார். ஒரு வருட தடைக்கு பிறகு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி அதிகம் வலுவடைந்து உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் மற்றும் சில அனுபவ வீரர்கள் உள்ளனர்.
யுவராஜ் சிங் பற்றி பார்க்கும்போது, இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். ஆனால் இவர் அந்த அணியின் வழக்கமான வீரராக இல்லை. 4 போட்டிகளில் பங்கேற்று 98 ரன்களை குவித்துள்ளார். வாய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வருகிறார் யுவராஜ் சிங்.
2017ல் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரே யுவராஜ் சிங் இந்திய அணிக்கு விளையாடிய கடைசி தொடராகும். ஐசிசி தொடர் என்று பார்த்தால் 2017 சேம்பியன் டிராபி.